Judge Arumugamasi Commission to Dr. Balaji Samson
டாக்டர்கள் பாலாஜி, சுவாமிநாதன் ஆகியோர் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி இடைத்தேர்தலின்போது தேர்தல் ஆவணத்தில் ஜெயலலிதாவின் கைரேகையை பெற்றது குறித்த விளக்கத்தை டாக்டர் பாலாஜி, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி கடந்த டிசம்பர் மாதம் விளக்கம் அளித்தார். அப்போது, கைரேகை பெறும் போது ஜெயலலிதாவை சந்தித்ததாக கூறினார். எய்ம்ஸ் மருத்துவர்களும், லண்டன் மருத்துவரும்தான் சிகிச்சை அளித்ததாகவும், லண்டன் கொண்டுசெல்ல வேண்டுமென்ற அறிவுறுத்தலை ஜெயலலிதா ஏற்க மறுத்துவிட்டதாகவும் பாலாஜி கூறியிருந்தார்.
கைரேகை பெறும்போது ஜெயலலிதாவை சந்தித்தேன் என்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும், லண்டன் மருத்துவர்களும் தான் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தார்கள். பெங்களூரு, ஹைதராபாத்திலிருந்தும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் வந்தனர்.
சிகிச்சைக்காக லண்டன் செல்ல வேண்டும் என்ற அறிவுறுத்தலை ஜெயலலிதா ஏற்கவில்லை. ஜெயலலிதாவுடன், இறுதிவரை சசிகலா மட்டுமே இருந்தார் என்றும் அப்போது கூறியிருந்தார்.
இந்த நிலையில், மருத்துவர் பாலாஜி மீண்டும், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வரும் 11 ஆம் தேதி அன்று ஆஜராகுமாறு, டாக்டர் பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதேபோல் டாக்டர் சுவாமிநாதனுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. டாக்டர் சுவாமிநாதன் வரும் 12 ஆம் தேதி நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்க மாரடைப்பு ஏற்பட்டபோது டாக்டர் சுவாமிநாதன் மருத்துவம் அளித்தது குறிப்பிடத்தக்கது.
