பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா வருகை.. ஒதுக்கப்பட்ட நயினார் நாகேந்திரன் ..வீடியோ வைரல்
திருப்பூர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தமிழகத்திற்கு வருகை புரிந்த பாஜக தலைவர் ஜெ.பி நட்டாவிற்கு சால்வை அணிவிக்க வந்த பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனை, பாஜக மாநில முன்னாள் தலைவர் எல் .முருகன் தடுத்தி நிறுத்திய வீடியோ வைரலானதையடுத்து, பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட பல்லடம் சாலையில் வித்தியாலயம் பேருந்து நிறுத்தம் அருகே புதிதாக பாஜக மாவட்ட அலுவலகம் கட்டப்பட்டது. இந்த அலுவலக திறப்பு விழாவில் கலந்துக் கொள்வதற்காக, கடந்த புதன்கிழமையன்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா தமிழகம் வந்தார்.
புதிய மாவட்ட அலுவலகம் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்த பாஜக தேதிய தலைவர் ஜெ.பி.நட்டாவை கட்சி நிர்வாகிகள் பலர் சால்வை அணிவித்து வரவேற்றனர். அப்போது மரியாதை நிமித்தமாக சால்வை அணிவிக்க வந்த நயினார் நாகேந்திரனை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தடுத்து நிறுத்தினர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், கூட்டத்திலிருந்து விலகி சென்றுவிட்டார். பின்னர் அவர் அணிவிக்க எடுத்துவந்த சால்வை, மற்றொரு நிர்வாகி வாங்கி அதனை எல்.முருகனுக்கு அணிவித்தார். இந்த வீடியோ காட்சி தற்போது சமுக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
பின்னார் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜெ.பி.நட்டா ஈரோடு, திருநெல்வேலி, திருப்பத்தூர் ஆகிய இடங்களிலும் கட்டப்பட்டுள்ள பாஜக அலுவலகத்தை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட பொதுநிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அவர், சிறப்புரையாற்றினார். இதில் , காஷ்மீர் முதல் தமிழகம் வரை நாடு முழுவதும் நிலவும் வாரிசு அரசியலுக்கு முடிவு காண பா.ஜ.க வால் மட்டுமே முடியும் என்று பேசியது அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பேசிய அவர், தி.மு.க., என்றாலே ஊழல், குடும்ப அரசியல் என்ற நிலை தான் உள்ளது எனவும் அதன் செயல்பாடுகள் தேசத்துக்கே சவால் விடும் வகையில் உள்ளதாகவும் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் குடும்ப கட்சியாக உள்ளது என குற்றம்சாட்டிய அவர், கொரோனா காலத்தில் தி.மு.க., எங்கு இருந்தது என தெரியவில்லை என்று கேள்வியெழுப்பினார். பா.ஜ.க வினர் தான் மக்கள் தேவை அறிந்து பணியாற்றினர் என்றும் மழை வெள்ள பாதிப்பின்போதும் பா.ஜ.க தான் களம் இறங்கி பணியாற்றியது என்றும் கூறினார். தமிழகத்தின் கலாசாரத்தை சீரழிக்கும் வகையில் தி.மு.க., செயல்படுகிறதாகவும் இதை மீட்டெடுக்கும் வகையில் பா.ஜ.க செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதினிடையே தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் களப் பணியாற்றயிட வேண்டும் எனவும் விவசாயிகளை நேரில் சந்தித்து பிரச்னைகள், தேவைகள் குறித்து கேட்டறிய வேண்டும் எனவும் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்துக்கொண்டனர்.