Asianet News TamilAsianet News Tamil

இந்திய இராணுவம் தீவிரவாதிகளை கொன்றதா..?? உண்மையை சொல்லுங்க மோடி, கேள்விகளால் துளைத்தெடுக்கும் சிவசேனா...!!

சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி தீவிரவாதிகளை ஒழித்ததாக மத்திய அரசு கூறி வருகிறது . ஆனால் சமீபகாலமாக எல்லையில் இந்திய வீரர்கள்  தீவிரவாதிகளின் தாக்குதலில் கொல்லப்படுவது அதிகரித்துள்ளது . 
 

journal of  sivasena party samna release article against bjp government surgical strike against terrorist
Author
Mumbai, First Published Jan 3, 2020, 5:11 PM IST

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடந்தது உண்மைதானா என சிவசேனா இந்திய பிரதமர் மோடியிடம் கேள்விமேல் கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகள் முகாம்கள் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியதாக சொல்வது உண்மைதானா என சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா கேள்வி எழுப்பியுள்ளது.  இது பாஜக மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  மகாராஷ்டிரா தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றிபெற்ற பாஜக மற்றும் சிவசேனா இறுதியில் யார் முதல்வர் என்ற போட்டியில் பிரிந்தனர்.  பின்னர் சிவசேனா ,  தேசியவாத காங்கிரஸ், மற்றும் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சரானார். 

journal of  sivasena party samna release article against bjp government surgical strike against terrorist

பாஜகவுக்கும் அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது ,  பிரதமர் மோடியையும் பாஜகவின் ஆட்சியையும் வெளிப்படையாகவே உத்தவ் தாக்கரே விமர்சித்து வருகிறார் ,  குடியுரிமை சட்டத்தையும் சிவசேனா விமர்சித்து வருகிறது ,  இந்நிலையில் ஜம்மு காஷ்மீர்  எல்லையில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் நாயக் சாவந்த் சந்திப் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார்,  இதையடுத்து மத்திய அரசை சாம்னா கடுமையாக விமர்சித்துள்ளது,  அது வெளியிட்டுள்ள கட்டுரையில் ,  கடந்த 2016  ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உரித் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் நுழைந்து சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி தீவிரவாதிகளை ஒழித்ததாக மத்திய அரசு கூறி வருகிறது .  ஆனால் சமீபகாலமாக எல்லையில் இந்திய வீரர்கள்  தீவிரவாதிகளின் தாக்குதலில் கொல்லப்படுவது அதிகரித்துள்ளது . journal of  sivasena party samna release article against bjp government surgical strike against terrorist

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மகாராஷ்டிராவை சேர்ந்த 8 வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது கொல்லப்பட்டுள்ளனர் ,  இந்நிலையில் சர்ஜிகல் ஸ்ட்ரைக் மற்றும் 370ஆவது பிரிவு நீக்கம்  ஆகியவற்றிற்கு பின்னர் காஷ்மீரில் நிலைமை முன்னேறி உள்ளதாக மத்திய அரசு கூறுவது  கேள்விக்குள்ளாக்க வேண்டியுள்ளது. காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினர் மட்டுமே கொள்ளப்படுகிறார்கள் என செய்திகளை அரசு வெளியிடுகிறது, ஆனால் உண்மையில் இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு,  அவர்களின் உடல்கள் மூவர்ணக் கொடியால் போர்த்தப்பட்டு அவர்களின் சொந்த ஊர்களுக்கு வருகிறது,

journal of  sivasena party samna release article against bjp government surgical strike against terrorist

2016ம் ஆண்டு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்திய தீவிரவாதிகளை அடக்கி விட்டோம் என்றால் ஏன் இப்படி நடக்கிறது, உண்மையிலேயே சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்  தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது தற்போது சந்தேகத்தை எழுப்புகிறது,  ஏன் என்றால் தீவிரவாத தாக்குதல் தற்போது அதிகரித்து விட்டது என அந்த கட்டுரையில் பாஜகவை சராமரியாக விமர்சித்துள்ளது சிவசேனா.

Follow Us:
Download App:
  • android
  • ios