தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சிறுபான்மையினர் நல பிரிவு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சிறுபான்மையினர் நல பிரிவு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் வேறு கட்சியில் இணைந்து பணியாற்ற விரும்பினால் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவர்கள் விரும்பும் கட்சியில் அணைந்து கொள்ளலாம் என கடந்த 18ம் தேதி ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்த உறுப்பினர்கள் மற்றம் நிர்வாகிகள் பலர் திமுகவில் இணைந்து வருகின்றனர்.
இந்நிலையில், ரஜினி மன்றத்தில் தூத்துக்குடி மாவட்ட செயலாளராக இருந்த ஜோசப் ஸ்டாலின் உட்பட 4 மாவட்ட செயலாளர்கள் நேற்று முன்தினம் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். தூத்துக்குடி மாவட்ட செயலாளராக இருந்த ஜோசப் ஸ்டாலின் திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 21, 2021, 7:13 PM IST