தமிழகத்தில் நடைபெற்று வரும் அரசியல் சூழ்நிலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அணிகள் இணைப்பு; டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தனிக் கொடி பிடிப்பது; புதுவையில் தங்கி இருக்கும் டிடிவி ஆதரவு அணியினர், ஓ.பி.எஸ். உருவ படத்தை எரிப்பது; 19 எம்எல்ஏக்கள் தங்கியுள்ள ரிசார்ட்டுக்கு முன்பு, டிடிவியின் உருவப்படத்தை எரிப்பது என பல்வேறு நிகழ்வுகள் தமிழகத்தில் நடைபெற்று வருகின்றன.

ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று தமழகம் வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு, நாளை சென்னை வர உள்ளார். இந்த நிலையில், கர்நாடவின் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்ச்ர ரோஷன் பேய்க் நாகூர் தர்க்காவிற்கு வருகை தந்துள்ளார்.

நாகூர் தர்கா சென்ற, ரோஷன் பேய்க்-கிற்கு, மாநில காங்கிரஸ் சிறுபான்மை துறை ஒருங்கிணைப்பாளர் ஏ.ஆர். நம்சார் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

சாமி தரிசனத்துக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் நல்லது நடக்க வேண்டும் என்றே பிரார்த்தனை செய்ய வந்தேன். தமிழகத்தில் காமராஜர், அண்ணா, எம்ஜி.ஆர். கருணாநிதி, பக்தவச்சலம் போன்ற
சிறப்பான நல்ல மக்கள் முதலமைச்சர்கள் இருந்தனர்.

அப்படிப்பட்ட தமிழகத்தில் தற்போது ஜோக்கர் ஆட்சி நடந்து வருகிறது. தமிழகத்தில் நல்ல அரசாங்கம் அமைய வேண்டும். தமிழகமும் கர்நாடகமும் பாகிஸ்தான் அல்ல. விரைவில் நல்லது நடக்கும். விரைவில் தண்ணீர் கிடைக்கும். என்று கன்னட அமைச்சர் ரோஷன்
பேய்க் கூறியுள்ளர்.