jeyalalitha helper poongundran agaist statement by income tax departmen
ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரான நிலையில், திடீரென ஜெவின் இல்லத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. பூங்குண்றன் அளித்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெறுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயலலிதாவின் தனி உதவியாளராக பூங்குண்றன் பதவி வகித்து வந்துள்ளார்.
சசிகலா மற்றும் பூங்குன்றனை தாண்டி ஒரு அமைச்சரால் கூட ஜெயலலிதாவை சந்திக்க கூடிய நிலை இருந்ததில்லை என கூறப்படுகிறது. போயஸ்கார்டனில் நடக்கும் அனைத்துவிதமான சம்பவங்களும் இவர்கள் இரண்டு பேருக்கும் தெரியாமல் நடக்காது என்றே சொல்லலாம்.
இதற்காகவே பூங்குன்றனுக்கு போயஸ்கார்டனில் உள்ள கட்டடத்தில் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கடந்த 9 ஆம் தேதி சசிகலா உறவினர்கள், நண்பர்களுக்கு சொந்தமான 187 இடங்களில் 1800 வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் ஜெயா டிவி, நமது எம்.ஜி.ஆர் நிறுவனம் என பல்வேறு இடங்களிலும் சோதனை நடைபெற்றது.
இந்த சோதனை 6 நாட்களுக்கு மேலாக நீடித்தது. இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் சசிகலா குடும்பத்தினர் ஒவ்வொருவரிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதில் முக்கியமாக ஜெயா டிவி சிஇஓ விவேக், சசிகலாவின் சகோதரர் திவாகரன், இளவரசியின் மகள்கள் கிருஷ்ணப்பிரியா, சகிலா, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆகியோரிடம் விசாரனை நடத்தி வருகின்றனர்.
இதில் சற்று நேரத்திற்கு முன்பு ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன இரண்டாவது முறையாக வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளித்தார்.
இந்நிலையில், போயஸ்கார்டனில் பூங்குன்றன் அறையிலும் ஜெயலலிதாவின் இல்லத்திலும் 3 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் 2 வது முறையாக வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரான நிலையில், திடீரென ஜெவின் இல்லத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. பூங்குண்றன் அளித்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெறுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது
