Jeyakumar should stop confusing the volunteers by k.p.munusamy
அதிமுக இரு அணிகள் இணைய உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் பேசி வருகிறாரே என்று கேட்டதற்கு பதிலளித்த ஓ.பி.எஸ். அணி மூத்த தலைவர் கே.பி. முனுசாமி, அமைச்சர் ஜெயக்குமாரை கடுமையாக எச்சரித்தார்.
ஒவ்வொரு மாவட்டமாக செயல் வீரர்கள் கூட்டம் நடத்தி வருகிறோம். அவ்வாறு செயல் வீரர்கள் கூட்டத்திற்கு ஓ.பி.எஸ். சாலை வழியாக செல்லும்போது எப்படி அம்மாவை வரவேற்பார்களே அந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்து வருகிறது. இதை பார்த்து பொறுக்க முடியாமல், அவர்கள் காழ்ப்புணர்ச்சி கொண்டுள்ளனர்.
போலியாக எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை நடத்த முயன்றனர். நாங்கள் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்துவதைப் பார்த்து இவர்களும் நடத்த முற்பட்டனர்.
அரசு செலவில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை நடத்தினார்கள். அதற்கு வரவேற்பில்லை. பணம் கொடுத்து கூட்டம் சேர்த்தும், கூட்டம் வெற்றி பெறவில்லை.
இந்த நிலையில் அமைச்சர் ஜெயக்குமார், இரு அணிகளிடையே குழப்பம் ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார். இரு அணிகளும் விரைவில் இணையும் என்று கூறி வருகிறார். இதனை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
மக்கள், தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். ஆகவே, குழப்பத்தை ஏற்படுத்துவதை அமைச்சர் ஜெயக்குமார் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கே.பி. முனுசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
