விக்ரவாண்டியில் தொகுதி திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்த அரக்கோணம் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அங்கு நடைபெற்ற பிரச்சாரக்கூட்டம் ஒன்றில் பேசிய எம்.பி.ஜெகத்ரட்சகன், மருத்துவர் ராமதாஸ் வன்னியர் சமுதாய மக்களுக்கு என்ன செய்துள்ளார் என கேள்வி எழுப்பினார்.

பாமகவை வளர்த்தெடுத்த ‘காடுவெட்டி குரு’ மறைந்து அவர் உடலை மருத்துவமனையிலிருந்து எடுத்துச் செல்ல அவர்கள் குடும்பத்துக்கு மூன்று லட்சம் தேவைப்பட்டது. அதைக்கூட நான் தானே கொடுத்தேன்.

குருவின் குடும்பம் இன்று பிச்சை எடுக்கிறது. இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 குடும்பங்கள் இன்று தத்தளிக்கின்றன. அவர்களுக்காக ஏதேனும் செய்திருக்கிறாரா ராமதாஸ். 

வன்னியர் சமுதாயத்திற்காக ராமதாஸ் என்ன செய்துள்ளார். வன்னியர் மக்களுக்காக தலைவர் தான் கலைஞர் பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளார் என ஜெகத்ரட்சகன் அதிரடியாக பேசினார்..