Jeer Sadagopa emamanujar speech in thiruchencode

இந்து மதம் குறித்து இனி யாராவது அவதூறாக பேசினால் அவர்கள் மீது சோடா பாட்டில் விசு தயாராக இருப்பதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பொதுக்கூட்ட மேடை ஒன்றில் பேசி பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.

விருதுநர் மாவட்டம் ராஜபாளையத்தில் கருத்தரங்கில் பேசிய கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்துப் பேசி பெரும் சர்ச்சைக்கு ஆளானார். வைரமுத்துவின் பேச்சு ஆண்டானை அவமதிப்பதாக இருப்பதாகவும் அவர் தனது கருத்துக்கு மன்னிப்புட்க கேட்க வேண்டும் என்று பாஜக மற்றும் இந்த அமைப்புகள் வலியிறுத்தின.

வைரமுத்து இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனால் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயா் சடகோப ராமானுஜா் ஜீயா் , வைரமுத்து ஆண்டாள் சன்னிதியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உண்ணா விரதத்தில் ஈடுபடத் தொடங்கினார்.

ஆனால் உண்ணாவிரதம் தொடங்கிய அடுத்த நாளை அதை முடித்துக்கொண்ட ஜீயர், வரும் பிப்ரவரி 3 ஆம் தேதிக்குள் வைரமுத்து ஸ்ரீவில்லிபுத்துருக்கு நேரடியாக வந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என கெடு விதித்துள்ளார்.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் வைரமுத்துவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர், ஆண்டாளை அவமதித்த கவிஞர் வைரமுத்து வரும் 3 ஆம் தேதிக்குள் ஆண்டாள் கன்னதியில் வந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அவர் மன்னிப்புக் கேட்கவில்லை என்றால் மீண்டும் உண்ணா விரதம் மேற்கொள்ளப்போவதாக தெரிவித்தார்.

தொடா்ந்து பேசிய அவர், கற்களை எறிவதற்கும், சோடா பாட்டில் வீசவும் எங்களுக்கும் தெரியும். ஆனால் நாங்கள் அதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என தெரிவித்தார். .

சாமியார்கள் என்றால் ஒன்றும் செய்ய மாட்டார்க்ள் என்று நினைக்க வேண்டாம் என்றும் தொடா்ந்து இந்து மதத்திற்கு எதிரான கருத்துக்களை யாராவது பேசினால் நாங்களும் சோடா பாட்டில் வீச தயங்க மாட்மோம் என்று பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.