எப்போதும் தமிழ் கலாச்சாரத்தை போற்றி சேலை அணிந்து எளிமையாக வலம் வருபவர் கரூர் எம்.பி ஜோதிமணி. சர்வதேச அளவில்  25 நாடுகளில் இருந்து 25 பெண் அரசியல்வாதிகள் பங்கேற்கும் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கிளம்பியுள்ளார். 

அவரை அரவக்குறிச்சி திமுக எம்.எல்.ஏ விமான நிலையத்தில் இருந்து வாழ்த்தி அனுப்பி வைத்துள்ளார். அமெரிக்காவில் நடைபெறும் இந்த மாநாட்டில்  இந்தியாவில் இருந்து இந்த ஆண்டு செல்லும் ஒரே பெண்மணி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி ஜோதிமணி மட்டுமே. அமெரிக்கா செல்வதை தொடர்ந்து சேலை என பாரம்பரிய ஆடையை விடுத்து ஜீன்ஸ் பேண்ட், டீசர்ட், ஷூ அணிந்து மாடர்ன் மங்கையாக மாறி இருக்கிறார் ஜோதிமணி. 

2010 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற இந்த சர்வதேச மாநாட்டில் கவிஞர் சல்மா பங்கேற்றார். அமெரிக்க அரசின் சார்பில் “சர்வதேச பெண் அரசியல் தலைவர்கள்’என்ற தலைப்பில் அவர் கலந்துரையாடினார்.  இந்த மாநாட்டில் இந்திய அரசியலில் பெண்களின் பங்களிப்பு குறித்தும்,​​ பெண்கள் அரசியலில் ஈடுபட்டுள்ளதற்கு பிறகு ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்தும் ஜோதிமணி பேச இருக்கிறார்.