காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சியில் குமாரசாமி முதலமைச்சராக இருந்தார். ஆனால் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 15 பேர் ராஜினா செய்ததையடுத்து குமாரசாமி தலைமையிலாக அரசு கவிழ்ந்தது.

இதனைத் தொடர்ந்து பாஜக சட்டமன்றகுழுத் தலைவர் எடியூரப்பா நேற்று முதலமைச்சராக பதவிஏற்றுக் கொண்டார். அதே நேரத்தில் நேற்று மஜத எம்எல்ஏக்கள் கூட்டம் குமாரசாமி தலைமையில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற சில எம்எல்ஏக்கள் எடியூரப்பாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என குமாரசாமியை வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இது குறித்து  செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ள கர்நாடக முன்னாள் முதலமைச்சர்  குமாரசாமி , பாஜகவுக்கு நான் ஆதரவு அளிப்பதாக வெளியான தகவல் அடிப்படை ஆதாரமற்றது.  

மஜத எம்.எல்.ஏக்கள், கட்சி தொண்டர்கள் இதுபோன்ற வதந்திக்கு செவி சாய்க்க தேவையில்லை. பாஜகவுக்கு ஆதரவு என்ற தகவல் உண்மைக்கு வெகு தொலைவில் உள்ளது.

மக்களுக்கு சேவை செய்வதன் மூலம் கட்சியை வலுப்படுத்துவோம். சாமானிய மக்களுக்கான எங்களின் போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்தார்..