j.deepa complained to commissioner office about nettisans
சமூக வலைதளங்களில் தன்மீது அவதூறுகள் பரபரப்பப்படுவதாகவும், தனக்கிருக்கும் நற்பெயரை கெடுக்க பார்க்கிறார்கள் எனவும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அரசியலுகுள் நுழைந்தவர் ஜெவின் அண்ணன் மகளான தீபா.
இவர் சில நாட்களாக அதிமுகவை கைப்பற்றுவேன் என கூறி வந்தார். அதற்காக ஒரு பேரவையையும் உருவாக்கினார்.
அதில் பல்வேறு உச்சகட்ட குழப்பங்கள் நிலவி வருகிறது. இதனால் ஜெ.தீபா பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்தார்.
நெட்டிசன்களும் தீபாவை வச்சி செய்கின்றனர் என்றே சொல்லலாம். இதனால் பொறுமை இழந்த தீபா இன்று பகல் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு ஆணையாளரை சந்திக்க வேண்டும் என்றும், புகார் மனு கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
அதையடுத்து, அவரிடம் இருந்து புகார் மனுவை துணை ஆணையாளர் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
அந்த புகார் மனுவில், பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி அவதூறு கருத்துகள் பரபரப்பப்படுவதாகவும் இதனால் தனது நற்பயருக்கு களங்கம் ஏற்படுகிறது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
எனவே, அவதூறு பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி சில வலைதளங்கள் பக்கங்களின் நகல்களையும் இணைத்திருந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெ.தீபா, தன்னை சசிகலா குடும்பத்தினர், டிடிவி தினகரன் தரப்பினர் தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் புகார் தெரிவித்தார்.
