முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர்  ஜெயந்தி நடராஜன் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது ஜெயந்தி நடராஜன் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தார். மத்திய அமைச்சராக இருந்தபோது, தொழில் அதிபர்களுக்கு சலுகை காட்டியதாக அவர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது. 

இந்த நிலையில், ஜெயந்தி நடராஜன் வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்கள், காஞ்சிபுரத்தில் உள்ள அவருக்கு சொந்தமான வீடுகளிலும், அவரின் உறவினர்களின் வீடுகளிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜன், காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த 2015 ஆம் ஆண்டு விலகினார்.