முதல்முறையாக வெளிநாடு பயணம் செய்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதாவின் சமாதிக்கு வந்து மரியாதை செலுத்தவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு முறை பயணமாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா, லண்டன் நாடுகளில் வரும் 28-ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவருடன், தொழில் துறை அமைச்சர் சம்பத், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஊரக தொழில்துறை அமைச்சர் பென்ஜமின், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டவர்கள் மற்றும் அந்த துறை செயலாளர்கள், அதிகாரிகள் குழுவும் உடன் சென்றனர். மீண்டும் செப்டம்பர் 9-ம் தேதி அன்றுதான் அவர் சென்னை திரும்ப உள்ளார். 

இந்நிலையில், ஜெயலிலதா நினைவிடத்தை மையமாக வைத்து ஒரு புதிய சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது ஓபிஎஸ் வட்டாரம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன் வாழ்க்கையில் முதன்முறையாக அரசு முறை பயணமாக வெளிநாடு செல்கிறார். அப்படிப்பட்டவர் ஜெயலலிதாவின் சமாதிக்கு வந்து மரியாதை செலுத்திவிட்டு சென்றிருக்க வேண்டும். 

ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை. தனக்கு இப்படிப்பட்ட இடத்தை உருவாக்கிக் கொடுத்த ஜெயலலிதாவுக்கே மரியாதை செய்யாமல் அவர் வெளிநாடு புறப்பட்டு இருக்கிறார் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனக்கு நெருக்கமான வட்டாரங்களில் அதிருப்தியைப் தெரிவித்துள்ளார். உடனே இந்தத் தகவல் வெளிநாட்டில் இருக்கும் எடப்பாடி பழனிசாமியிடமும் கொண்டு செல்லப்பட்டு விட்டது. ஆனால் அவரோ, பன்னீர் சொல்வது பற்றியெல்லாம் எதுவும் கண்டுக்காதீங்க என்று உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.