Asianet News TamilAsianet News Tamil

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை முதல்வர் திறந்து வைத்தார்... கொரோனா அச்சம் தாண்டி திரண்ட அதிமுவினர்..!

சென்னை மெரினாவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். 

Jayalalithaa Memorial open
Author
Chennai, First Published Jan 27, 2021, 11:25 AM IST

சென்னை மெரினாவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். 

சென்னையில் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல், மெரினா கடற்கரை ஓரத்தில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. இந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. 

Jayalalithaa Memorial open

அவருக்கு நினைவிடம் அமைக்க சுமார் ரூ.70 கோடியை தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இதைத்தொடர்ந்து, 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பில் ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிக்கு கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 8ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அடிக்கல் நாட்டினார். சுமார் 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. 

Jayalalithaa Memorial open

இந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை இன்று காலை 11 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் கலந்துகொள்ள அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள் குவிந்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios