Jayalalithaa courageous girl. If he had a descendant he would have said

மிகவும் துணிவான பெண்ணான ஜெயலலிதாவுக்கு வாரிசு இருந்திருந்தால் அவர் வெளிப்படையாகவே கூறியிருப்பார் என்றும், ஜெ. சொத்துக்களை அபகரிக்கவே சிலர் மகள் என்று கூறி வருவதாகவும் நடிகை லதா கூறியுள்ளார்.

தமிழகத்தின் முதலமைச்சராக 6 முறை சேவை ஆற்றியவர் ஜெயலலிதா. உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார். கடந்த 30 ஆண்டு காலம் தமிழக அரசியல் களத்தில் மிகுந்த பங்களிப்பை கொண்ட அரசியல் தலைவராக வலம் வந்தவர். அரசியலில் துணிச்சல் மிக்க பெண்ணாக பல்வேறு சோதனைகள், போராட்டங்கள், வழக்குகள் என அனைததையும் தனி ஆளாக எதிர்கொண்டு செயல்பட்டு வந்தவர் ஜெயலலிதா. தமக்கு வந்த சோதனைகளை எல்லாம் தவிடுபொடியாக்கியவர் அவர். 

தமிழகத்தின் மிக முக்கியமான காவிரி பிரச்சனை, முல்லை பெரியாறு பிரச்சனைகளில் அவர் திடமான முடிவெடுத்து நிலை மாறாமல் செயல்பட்டு வந்தார். தமிழகத்துக்காக சாதகமான தீர்ப்புகளை முதலமைச்சராக இருந்து அவரால் பெற முடிந்தது. இதனை தமிழக மக்கள் அனைவருமே உணர்ந்திருப்பார்கள். மிக துணிச்சலுடன், தீர்க்கமான மனத்துடனும் செயல்படக் கூடியவர் முதலமைச்சர் ஜெயலலிதா என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். 

உடல் நலக் குறைவு காரணமாக கடந்த வருடம் டிசம்பர் 5 ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா காலமானார். அவரின் மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண், தான் ஜெயலலிதாவின் மகள் என்று உச்சநீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அந்த மனுவை நிராகரித்த நீதிமன்றம், கர்நாடகம், தமிழக உயர்நீதிமன்றத்தில் மனு செய்யவும் அறிவுறுத்தி இருந்தனர்.

கடந்த சில தினங்களாக சென்னையில் தங்கியிருந்த அம்ருதா, ஜெயலலிதாவின் மகள் என்றதாலேயே அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அம்ருதா, பெங்களூரு சென்று விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தான் ஜெயலலிதாவின் மகள் என்று அம்ருதா கூறி வருவதற்கு, அதிமுகவைச் சேர்ந்த பலர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஜெயலலிதாவின் நற்பெயரைக் களங்கப்படுத்தும் வகையில் அம்ருதா பேசி வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மிகவும் துணிச்சலான பெண்ணான ஜெயலலிதாவுக்கு வாரிசு இருந்திருந்தால் அவர் வெளிப்படையாகவே கூறியிருப்பார் என்று நடிகை லதா கூறியுள்ளார்.

தான் ஜெயலலிதாவின் மகள் என்று அம்ருதா கூறி வருவது குறித்து நடிகை லதா இவ்வாறு பேசியுள்ளார். மேலும் பேசிய நடிகை லதா, ஜெயலலிதாவின் சொத்துக்களை அபகரிக்கவே சிலர் மகள் என்று கூறி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அதை விமர்சனம் செய்ய யாருக்கும் உரிமை கிடையாது. யாரும் விமர்சிக்கவும் முடியாது. ஜெயலலிதாவுக்கு குழந்தை இருந்ததா என்பது எனக்குத் தெரியாது. அப்படி இருந்திருந்தால் ஜெயலலிதாவே தன்னுடன் வைத்துக் கொண்டிருப்பார். எந்தத் தாயும் தனக்கு குழந்தை இல்லை என்று மறுக்க மாட்டார் என்றும் லதா கூறியுள்ளார்.