Asianet News TamilAsianet News Tamil

ஜெ.,யின் நீண்டநாள் பாதுகாவலர் இழப்பு பேரிழப்பு.. ஃப்ளாஷ்பேக்கை கூறி கலங்கிய பூங்குன்றன்..!

நான் பார்த்து பழகிய மனிதர்களில் இவருக்கு என் இதயத்தில் என்றுமே தனி இடம் உண்டு. அன்பு நிறைந்தவர். ஆற்றல் மிகுந்தவர். அண்ணா என்று பலரை அழைத்தாலும் இவரை 'சீமைச்சாமி அண்ணா' என்று அழைக்கும் போது மட்டுமே உள்ளத்தில் உவகை கூடும்.

Jayalalitha security officer Seemaichamy dies...poongundran is disturbed by telling the flashback
Author
First Published Dec 3, 2022, 6:49 AM IST

அம்மாவின் பாதுகாப்பு படையில் ஆரம்பம் முதல் கடைசிவரை  ஓடிக்கொண்டே இருந்த அண்ணன் சீமைச்சாமியின் இழப்பு பேரிழப்பு என பூங்குன்றன் கூறியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளரான பூங்குன்றன் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- நான் பார்த்து பழகிய மனிதர்களில் இவருக்கு என் இதயத்தில் என்றுமே தனி இடம் உண்டு. அன்பு நிறைந்தவர். ஆற்றல் மிகுந்தவர். அண்ணா என்று பலரை அழைத்தாலும் இவரை 'சீமைச்சாமி அண்ணா' என்று அழைக்கும் போது மட்டுமே உள்ளத்தில் உவகை கூடும். அப்படி இன்று அன்போடு அழைக்க அவர் இல்லையே! வேதா இல்லத்திற்கு வந்த யாராக இருந்தாலும் இவரின் அன்பில் இருந்து தப்பித்திருக்க முடியாது.  அம்மாவோடு பயணித்தவர்கள் யாராலும் இவருடைய மறைவை ஏற்றுக் கொள்ள முடியாது. மனதில் எந்தவித களங்கமும் இல்லாமல் இயல்பாகப் பழகக் கூடியவர்.  

இதையும் படிங்க;- 'லவ் டுடே' படம் எப்படி இருக்கு.? திடீரென விமர்சகர் அவதாரம் எடுத்த ஜெயலலிதா மாஜி உதவியாளர்.!

Jayalalitha security officer Seemaichamy dies...poongundran is disturbed by telling the flashback

அன்போடு அறிவுரை சொல்லக்கூடியவர். ஏழ்மையான கழகத்தினர் வந்துவிட்டால் அவர்களை அழைத்து வந்து, அவர்கள் செல்லும் வரை இவர் கவனிக்கும் விதமே தனி.  இப்படி அவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். சீமைச்சாமி அவர்களுடன் பழகியவர்களுக்குத் தான் அந்த உயர்ந்த உள்ளத்தின் மகத்துவம் புரியும். அம்மா அவர்களின் பணியாளர்களுக்கு இவரின் இழப்பு பேரிழப்பு. இன்று நீயில்லாமல் நாங்கள் பிரிந்து கிடக்கிறோம் தாயே! நீ தந்த  உறவுகளை விட்டு தள்ளி நிற்கிறேன் தாயே!   கழகத்தின் மீது மிகுந்த பாசம் கொண்ட குடும்பம். கழகத்திற்காக எதையும் செய்யத் துடிக்கும் குடும்பம்.  சீமையின் அண்ணன் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தமிழரசன் அவர்கள், நெடுங்காலம் அம்மா பேரவைச் செயலாளர். அவருடைய தம்பி பொன்னுச்சாமி மேலூர் ஒன்றியக் கழகச் செயலாளர். என் தம்பியைப் போல் கட்சியை நேசிக்க யாரும் இல்லை என்று சீமைச்சாமி அண்ணனே என்னிடம் தெரிவித்திருக்கிறார். 

Jayalalitha security officer Seemaichamy dies...poongundran is disturbed by telling the flashback

அப்படி கழகத்தின் மீது வெறிபிடித்த கொள்கை குடும்பம். கழகத்தை நேசிப்பவர்கள் யாராக இருந்தாலும் தன்னுடைய குடும்பத்தில் ஒருவராக பாவித்த அண்ணனின் மறைவு கழகத்திற்கும் பேரிழப்பு. உதவி ஆய்வாளராக இருந்தாலும், உயர் அதிகாரிகள் கூட இவர் மீது மிகுந்த அன்பு செலுத்துவார்கள். மரியாதை கொண்டிருப்பார்கள். காரணம் அவர்கள் பயிற்சி பெறும் போது இவர் தான் பயிற்றுநராக அவர்களை பயிற்றுவித்திருக்கிறார். எல்லோரிடமும் நன்மதிப்பை பெற்றவர். அம்மாவின் பாதுகாப்பு படையில் ஆரம்பம் முதல் கடைசிவரை  ஓடிக்கொண்டே இருந்தவர். இவர் ஒடும் ஓட்டம் பார்ப்பவரையும் ஓட வைக்கும். 

இதையும் படிங்க;- தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்கும் BJP!பெரிய கட்சி சிறிய கட்சியாக மாறப்போகிறது!அதிமுகவை எச்சரிக்கும் பூங்குன்றன்

Jayalalitha security officer Seemaichamy dies...poongundran is disturbed by telling the flashback

எப்படி களைப்பில்லாமல் ஓடுகிறார் என்று எண்ண வைக்கும். உடன் இருப்பவர்களையும் உற்சாகத்தோடு ஓட வைக்கும். கடமைமிக்க இவரின் இழப்பு காவல் துறைக்கும் பேரிழப்பு. இவரைப் பற்றி எழுதும்போது என் எண்ணங்கள் விரிந்து கொண்டே செல்கின்றன. நாங்கள் அம்மாவோடு பயணித்த தருணங்களை நினைக்க நினைக்க மனம் மரத்துப் போகிறது. மேலும் எழுத முடியாமல் கை நடுங்கி நிற்கிறது. அண்ணன் சீமைச்சாமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என பூங்குன்றன் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க;-  வெற்றியை நோக்கி நகரும் சீமான்.. வழிகாட்டும் முப்பாட்டன் முருகன்.. புளங்காகிதம் அடையும் ஜெ. உதவியாளர்!

Follow Us:
Download App:
  • android
  • ios