jayalalitha poes garden house issue tn government should enquire within four weeks says high court

ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் தோட்ட இல்லம் குறித்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இன்று புது உத்தரவை பிறப்பித்தது. 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் தோட்ட இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்ற அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்குக் எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தாக்கல் செய்த மனுவை, நான்கு வாரங்களில் விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தமிழக அரசிடம் கோரிக்கை மனு அளிததார். இந்த மனுவை விசாரித்து அரசு தனது முடிவை அறிவிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தீபா சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. 

தீபா தாக்கல் செய்த மனு மீது திங்கள்கிழமை இன்று விசாரணை நடத்தியது சென்னை உயர்நீதிமன்றம். அப்போது தீபா கொடுத்த கோரிக்கை மனுவை நான்கு வாரங்களில் விசாரித்து, அதன் மீது உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கை முடித்து வைத்தது.