தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நீர்ச்சத்து குறைபாட்டால், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இதயம் செயல் இழப்பால், நேற்று இரவு மரணமடைந்தார். 

சென்னை, ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு பிரதரமர் மோடி, கவர்னர் வித்தியாசாகர் ராவ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கில் தெரிவிக்கும் வகையிலும், அந்த சோகத்தில் தாங்களும் பங்கு கொள்ளும் வகையில், அண்டை மாநிலங்களான கர்நாடாக, புதுச்சேரியில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுஇருந்தது.

இதையடுத்து, ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, முன்னாள் பிரதமர் தேவே கவுடா, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக், மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா ஆகியோர் நேரில் வந்து மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.