சென்னை ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெ உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முதல்வரின் உடலுக்கு ஆளுநர் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவ் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதனையடுத்து மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன்,விசிக தலைவர் தொல்.திருமாவளவன்,மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்,டி.கே ரங்கராஜன் எம்.பி,புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி,மனித நேய கட்சி தலைவர் ஜவஹிருல்லாஹ் உள்ளிட்ட ஏராளமானோர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு புகழ் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து பல்வேறு கட்சி தலைவர்களும் முதல்வரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.