Asianet News TamilAsianet News Tamil

அவமானப்பட்டவரை அமைச்சராக்கி அழகுபார்த்த ஜெ…

jayalalitha passed-away-5mz2r2
Author
First Published Dec 6, 2016, 5:23 PM IST


ஒரு தாழ்த்தப்பட்ட வேட்பாளரை தனது கட்சிக்குள்ளே மதிப்பு குறைவாக நடத்துகிறார்கள் என்ற செய்தி கேட்டு வருந்திய முன்னாள் ஜெயலலிதா அவரை அமைச்சராக்கி அழகு பார்த்த உருக்கமான சம்பவம் நடந்துள்ளது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம், 2001 சட்டப்பேரவை தேர்தலின் போது ஒரு அ.தி.மு.க வேட்பாளர் தேர்தல் வேலை செய்யும் கட்சி ஆட்களுக்கு சரியாக உணவு கூட வாங்கி தருவதில்லை என்று அவரிடம் கட்சிக்கள் சில உறுப்பினர்கள் புகார் கூறினர். உடனே அந்த குறிப்பிட்ட அந்த வேட்பாளர் போயஸ் கார்டன் அழைக்கப்படுகிறார்.

jayalalitha passed-away-5mz2r2

"என்னப்பா உன் மேல நிறையா புகார் வருதே, கட்சிக்காரர்களுக்கு சாப்பாடு கூட வாங்கி தர முடியாத உன்னால ??" என்று அந்த வேட்பாளரை ஜெயலலிதா கண்டித்துள்ளார்.

"அம்மா , நான் தாழ்த்தப்பட்ட ஜாதிய சேர்ந்தவன், என் வீட்ல சாப்பாடு செஞ்சு போட்டா யாரும் சாப்பிட மாட்டேங்கிறாங்க, செஞ்சதெல்லாம் வீணா கொட்ட வேண்டி இருக்கு, எல்லாருக்கும் வாங்கி கொடுக்க எனக்கு வசதியும் இல்ல, என்னை மன்னிச்சுருங்க என்று அந்த வேட்பாளர் கதறுகிறார் .

"அப்படியா விஷயம் , சரி நீ போய் கவலைப்படாம தேர்தல் வேலைகளை கவனி" என்று ஜெயலலிதா தெரிவித்தார்.

அந்த வேட்பாளர் வெற்றி பெற்று சட்டப் பேரவை உறுப்பினர் ஆனார்.  யாரும் எதிர்பாராத விதமாக அவரை உணவுத்துறை அமைச்சராகப் பொறுப்பு கொடுத்து அழகு பார்த்தார்.

தாழ்த்தப்பட்ட ஒருவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது வரவேற்பு என்று ஊடகங்களுக்கு செய்தியாகவும், அந்த அமைச்சர் சாந்திருக்கும் சமூகதினருக்கு அது அங்கீகாரம் என மக்கள் தரப்பில் பேசப்பட்டது. 

jayalalitha passed-away-5mz2r2

ஆனால், அந்த செயலின் உண்மையான அர்த்தம்

"நீ தாழ்ந்த ஜாதினு சொல்லி உன் வீட்டு சாப்பாடு வேண்டாம் என்று சொன்னார்களா! இனி நாட்டுக்கே நீ தான் சோறு போட போற" என்று ஜெயலலிதா சொல்லாமல் சொன்னார்.

அவரின் ஒவ்வொரு அதிரடியான முடிவிற்கு பின்னால் இப்படி ஓரு தாயுள்ளம் கொண்ட சிந்தனை இருந்திருக்கக்கூடும்...!!

#இரும்புபெண்மணி_JJ

அந்த அமைச்சர் வேறு யாருமில்லை இப்போதைய சபா நாயகர் தனபால்தான்

Follow Us:
Download App:
  • android
  • ios