Asianet News TamilAsianet News Tamil

ஜெ. மரணம் குறித்து சரியான விசாரணை தேவை; தமிழிசை சௌந்தரராஜன்

Jayalalitha need a proper investigation into the death - Thamizhisai Soundararjan
Jayalalitha need a proper investigation into the death - Thamizhisai Soundararjan
Author
First Published Sep 24, 2017, 3:27 PM IST


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சரியான விசாரணை தேவை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருந்தபோது, தான் அவரை பார்த்ததாகவும் இட்லி சாப்பிட்டதாக கூறியதெல்லாம் பொய் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூட்டம் ஒன்றில் கூறியிருந்தார். அவரின் இந்த பேச்சு பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் இந்த பேச்சை அடுத்து, ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், செய்தியாளர்களிடம் பேசும்போது ஜெயலலிதா மரணம் குறித்து சரியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜெயலலிதா மரணம் குறித்து சரியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.

மேலும், சரியான விசாரணை என்பது சிபிஐ விசாரணையாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார். 

அனைத்துக்கும் சிபிஐ விசாரணை கோருவது சரியல்ல என்றும் தமிழிசை சௌந்தரரராஜன் கருத்து தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios