கட்டின பொண்டாட்டி மீது உரிமை காட்ட முடியாத அபாய்க்ய ஆண் வர்க்கத்தில் தீபாவின் கணவர் மாதவனும் இணைந்திருப்பது பெரும் சோகம்தான். தள்ளி வைக்கப்பட்ட நண்பர் ஆயில் ராஜாவை மீண்டும் தீபா கட்சிக்குள் சேர்த்துக் கொண்டதனால், வசந்தமாளிகை சிவாஜிகணேசன் போல்...

‘யாருக்காக, இது யாருக்காக?’ எனும் ரேஞ்சுக்கு சோக கீதம் பாடிக் கொண்டிருக்கிறார்.

தன் நிலையை நொந்து பேசியிருக்கும் மாதுக்குட்டி “என்னைப் பற்றி தீபாவிடம் மட்டுமில்லாது, வெளியேயும் மிக மோசமான பொய்களை பரப்பிக் கொண்டிருக்கிறார் ராஜா. நான் தீபாவை பொய் பேசி, ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக் சொல்கிறார். அது உண்மையில்லை.

எங்களுடைய திருமணம் முடிவாவதற்கு முன் கிட்டத்தட்ட ஒரு வருடமாக என்னுடையை நடவடிக்கையை கண்காணித்துதான் முடிவெடுத்தார்கள். ஜெயலலிதாவுக்கு பிடித்துப்போனதாலும், தீபாவின் அம்மா, தீபா இவர்கள் எல்லோருக்கும் என்னை பிடித்திருந்ததாலும்தான் என்னை தீபாவுக்கு திருமணம் செஞ்சு வெச்சாங்க.

தீபாவை அரசியல்ல பெரிய ஆளாக்க நினைச்சேன். ஆனா அவரோ நிலையில்லாமல் மாற்றி மாற்றி முடிவெடுக்கிறார். தீபாவோட பெயரை பயன்படுத்தி ராஜா நல்லா கொள்ளையடிக்கிறார். யாரெல்லோமோ பேரவையின் பெயரை நாசம் செய்கிறார்கள். எங்கள் வீட்டு தோட்டக்காரர், சமையல்காரர் போன்றவர்தான் ராஜா. ஆனால் இது என் தீபாவுக்கு புரிவதில்லை.

இனி பேசி பிரயோஜனமில்லை. அந்தப் பேரவைக்கும் எனக்கும் இனி எந்த தொடர்புமில்லை. ஆனால் ஒன்று மட்டும் உண்மை. ராஜாவிடம் ஏதோ ஒரு விஷயத்தில் வசமாக மாட்டிக் கொண்டுள்ளார் தீபா. அதை வைத்துத்தான் ராஜா மிரட்டி காரியம் சாதிக்கிறார்.

இதிலிருந்து என் தீபாவை எப்படி மீட்கப்போகிறேனோ, தெரியவில்லை.” என்று புலம்பிக் கொட்டியுள்ள மாதுக்குட்டியை தேற்றத்தான் ஆளில்லை.
பேபிம்மா ஏதாச்சும் பார்த்துப் பண்ணும்மா!