Jayalalitha image should not be opened in the Legislative Assembly - Vijayakanth

நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை, சட்டப்பேரவையில் திறக்கக் கூடாது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். 

தமிழக சட்டப்பேரவையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை, சபாநாயகர் தனபால் திறந்து வைக்க உள்ளார். இது குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை சட்டப்பேரவையில் திறக்கக்கூடாது என விஜயகாந்த் கூறியுள்ளார்.

சென்னை, அம்பத்தூரில், விஜயகாந்த், செய்தியாளர்களைச் சந்தித்தார். நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை, சட்டப்பேரவையில் திறக்கக் கூடாது; சட்டப்பேரவையில் அவரது படத்தை திறப்பது தவறு என்றார்.

ரஜினியும், கமலும், சினிமாவில் எனக்கு சீனியர்கள். ஆனால் அரசியலில் அவர்கள் எனக்கு ஜூனியர்கள் என்று கூறினார். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை தேமுதிக சந்திக்க தயாராக அதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது.

தமிழகத்தில் பாஜகவால் கை மட்டுமல்ல கால் கூட ஊன்ற முடியாது. ஏழை மாணவர்களால் பணம் கொடுத்து மருத்துவ இடம் பெற ஈடியாது என்பதால் நீட் அவசியம் என்று விஜயகாந்த் கூறினார்.