jayakumar tease o panneerselvam
பன்னீர்செல்வம் தலைமையிலான ஓ.பி.எஸ்.அணி மு.க.ஸ்டாலினின் ஊதுகுழல் என்று தமிழக நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டி உள்ளார்.
தமிழறிஞர் கால்டுவெலின் 203 வது பிறந்தநாள் விழா தமிழக அரசின் சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு சென்னை அண்ணாசதுக்கம் வளாகத்தில் உள்ள கால்வெல் சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "பன்னீர்செல்வம் தலைமையிலான ஓ.பி.எஸ். அணி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் ஊதுகுழலாக இருக்கின்றனர்.. ஆட்சி கலையும் என்று கட்சிக்கு சம்பந்தமில்லாத மைத்ரேயன் கூறும் கருத்துக்களை ஏற்க முடியாது.ஜெயலலிதாவின் ஆட்சி தொடர வேண்டும் என்று கருதுபவர்களே உண்மையான தொண்டர்கள். ஆட்சியை வீட்டுக் அனுப்ப முயலும் சந்தர்ப்பவாதிகள் காலத்தால் அடையாளம் காணப்படுவார்கள்."
சிறுகுச்சியும் பல் குத்த உதவும் என்பதைப் போல ஓ.பி.எஸ். கட்சிக்கு திரும்பினால் அவரை ஏற்போம்.தமிழகத்தில் குடிநீர் பிரச்சனை நிலவுவதாக ஸ்டாலின் கூறுவது ஆதரமற்ற குற்றச்சாட்டுகள் என்றும், 2021 ஆம் ஆண்டுதான் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும். அப்போதும் மக்களைச் சந்தித்து நாங்களே ஆட்சி அமைப்போம்" இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.
