யார் கட்சி தொடங்கினாலும் அதிமுக ஓட்டுக்களில் கை வைக்க முடியாது.! விஜய்யின் அரசியல் பயணம்- ஜெயக்குமார் பதில்
அரசியல் என்பது பெருங்கடல் அதில் நீந்தி கரை சேர்பவர்களும் உண்டு, மூழ்கி போகிறவர்களும் உண்டு. விஜய் கரை சேர்கிறாரா, மூழ்கி போகிறாரா என்று பார்க்கலாம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஆ.ராஜாவிற்கு கண்டன தீர்மானம்
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அம்மா பேரவை கூட்டம் நடைபெற்றது அதில் கலந்துக்கொண்ட பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்து தீர்மானமும், திமுக ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் கடந்து உள்ள நிலையில் மக்கள் படும் பிரச்சனைகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புரட்சி தலைவர் எம் ஜி ஆர் பற்றி சிறுமை படுத்தும் வகையில் பேசிய ஆ. ராஜாவிற்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறினார்.
அதிமுக ஓட்டுக்களில் கை வைக்க முடியாது
நடிகர் விஜய் கட்சி தொடங்கியுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். அரசியல் என்பது பெருங்கடல் அதில் நீந்தி கரை சேர்பவர்களும் உண்டு, மூழ்கி போகிறவர்களும் உண்டு இவர் கரை சேர்கிறாரா, மூழ்கி போகிறாரா என்று பார்க்கலாம் என தெரிவித்தார். நடிகர் விஜய் அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பது போல் ஊழல் நிறைந்த கட்சி திமுக, மதவாத கட்சி பாஜக எனவே அவர்கள் நாங்கள் இல்லை.
எங்களை குறிப்பிட்டு சொல்லாத வரை நாங்கள் கருத்து சொல்ல வேண்டியதில்லை. யார் கட்சி தொடங்கினாலும் அதிமுக ஓட்டுக்களை யாரும் கை வைக்க முடியாது. புதிய வாக்காளர்கள் எங்களுக்கு தான் வாக்களிப்பார்கள். திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு மிக மோசம், சாதாரண நடுத்தர, ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
விஜய் குறிப்பிடுவது எங்களை இல்லை
நடிகர் விஜய் ஆரம்ப காலங்களில் தன்னை எம்ஜிஆர் ரசிகராக காட்டிக்கொண்டது தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கையில், நான் விஜய்யை சிறுமைப்படுத்த விரும்பவில்லை, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தெய்வப்பிறவி புரட்சித்தலைவர் புரட்சித்தலைவர் தான், அவர் யாரைப் போல் வேண்டுமானாலும் சித்தரித்துக் கொள்ளட்டும் அது பற்றி எங்களுக்கு கவலை இல்லையென ஜெயக்குமார் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
Vijay politics : விஜய்யின் அரசியல் ஆசைக்கு காரணம் என்ன.? எப்போது ஜெயலலிதாவுடன் மோதல் உருவானது? ஏன்?