Asianet News TamilAsianet News Tamil

பழசை மறந்துடாதீங்க.. நன்றி கெட்ட கேகேஎஸ்எஸ்ஆர்.. நாவடக்கம் தேவை.. எச்சரிக்கும் ஜெயக்குமார்..!

அம்மா அவர்கள் முன்னெடுத்த வளர்ச்சித் திட்டங்கள் தான், நீங்கள் இன்று அமைச்சராக இருப்பதற்கு உங்களை அடையாளம் காட்டியது அஇஅதிமுக தான் என்பதை மறந்துவிடாதீர்கள். 

Jayakumar response to minister KKSSR Ramachandran
Author
First Published Jan 6, 2023, 8:48 AM IST

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்த கருத்துகளுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் ஜெயலலிதாவை ராட்சசி என்றும்,  தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தி நாட்டை நாசமாக்கியதில் எனக்கும் ஒரு பங்கு உண்டு. அந்த பாவத்தின் பலனை 10 ஆண்டுக்காலம் அனுபவித்தோம் என விமர்சித்திருந்தார். இவரது பேச்சு அதிமுக தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், , நீங்கள் இன்று அமைச்சராக இருப்பதற்கு உங்களை அடையாளம் காட்டியது அஇஅதிமுக தான் என்பதை மறந்துவிடாதீர்கள் என ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். 

இதையும் படிங்க;- ராட்சசியை அறிமுகம் செய்து நாட்டை நாசமாக்கியதில் எனக்கும் பங்கு உண்டு! ஜெ.குறித்து அமைச்சர் KKSSR கடும் தாக்கு

Jayakumar response to minister KKSSR Ramachandran

இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- நன்றி கெட்ட கேகேஎஸ்எஸ்ஆர் …நாவடக்கம் தேவை.. தமிழ்நாடு கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் வளர்ந்து இருப்பதற்கு காரணம் அம்மா அவர்கள் முன்னெடுத்த வளர்ச்சித் திட்டங்கள் தான், நீங்கள் இன்று அமைச்சராக இருப்பதற்கு உங்களை அடையாளம் காட்டியது அஇஅதிமுக தான் என்பதை மறந்துவிடாதீர்கள். நன்றி மறந்த உங்களுக்காக ஆரம்ப காலங்களில் பல தேர்தல்களில் உழைத்து அதிமுக- தான் தவறிழைத்துவிட்டது.

Jayakumar response to minister KKSSR Ramachandran

விசுவாசிகளுக்கு மட்டுமல்ல உங்களை போன்ற துரோகிகளுக்கும் வாழ்வு தந்தவர் அம்மா அவர்கள் தான் என்பதை  மறந்துவிடாதீர்கள். "யாகாவாராயினும் நாகாக்க" என ஜெயக்குமார் காட்டமாக பதிவிட்டுள்ளார். 

இதையும் படிங்க;- நீ எல்லாம் ஓபிஎஸ் பத்தி பேச தகுதியே இல்லை! அதிமுகவை அழிக்க நினைக்கும் ஜெயக்குமார்.. மருது அழகுராஜ் பகீர்.!

Follow Us:
Download App:
  • android
  • ios