எம்.எல்.ஏ. வெற்றிவேல் கருத்துக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

டிடிவி தினகரன் குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தால், கட்சியையும் ஆட்சியையும் இழக்க வேண்டி இருக்கும் என்று எம்.எல்.ஏ. வெற்றிவேல் கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் நிதியமைச்சர் ஜெயக்குமார் இவ்வாறு பேசியுள்ளார்.

நிதியமைச்சர் ஜெயக்குமார், நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது, கட்சி மற்றும் ஆட்சியை வழிநடத்துவது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் என்று கூறியிருந்தார்.

எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன்தான் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டாரே தவிர சசிகலா பதவி வழங்கவில்லை என்று கூறியிருந்தார்.

அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில், டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல், எச்சரிக்கை விடுக்கும் வகையில் கூறியிருந்தார்.

டிடிவி தினகரன் குறித்து, அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இது தொடர்ந்தால் அவர் கட்சி மற்றும் அமைச்சர் பதவியை இழக்க நேரிடும் என்று வெற்றிவேல் எம்.எல்.ஏ. எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியிருந்தார்.

வெற்றிவேல் எம்.எல்.ஏ.வின் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் எம்.எல்.ஏ. வெற்றிவேலின் கருத்துக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.

நிதியமைச்சர் ஜெயக்குமார், சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், கட்சி, ஆட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழி நடத்தி வருகிறார் என்றும், அதிமுகவின் இரு அணிகளின் இணைப்பு நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் கூறினார்.