jayakumar meeting with governor

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் ஜெயகுமார் ஆகியோர் சென்னை ராஜ்பவனில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று, கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவிடம் ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்பின் போது, அதிமுகவில் உள்ள இரு அணிகளும் ஒன்று சேர உள்ளது. இதில், சில எம்எல்ஏக்கள் டிடிவி.தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். இதனால், ஆட்சியை தொடர வாய்ப்பு உள்ளதா என ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது.

சிறிது நேரத்தில் வெளியே வந்த தம்பிதுரை, செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கடந்த 1999ம் ஆண்டு முதல் எனக்கு கவர்னரை தெரியும். அவர் எனக்கு நெருங்கிய நண்பர். அவருடன் அரசியல் சம்பந்தமாக எதையும் பேசவில்லை. நட்பு ரீதியாக சந்தித்து பேசினேன் என்றார்.

அவர் சென்று அரை மணிநேரத்துக்கு மேலாகியும், அமைச்சர் ஜெயகுமார், கவர்னருடன் பேசி வருகிறார்.

இந்த பேச்சு வார்த்தையின்போது, கடந்த சில நாட்களுக்கு முன் திமுகவினர், ஆர்கே நகரில் பணம் பட்டுவாடா செய்தது தொடர்பாக புகார் அளித்தது குறித்து, கவர்னர் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது.

மேலும், இரு அணிகளும் மீண்டும் ஒன்றாக இணையும்போது, யார் யாருக்கு பதவிகள் வழங்குவது. ஆட்சியை எப்படி தக்க வைப்பது என்பது குறித்து, ஆலோனை நடப்பதாக தெரியவருகிறது.