செந்தில்பாலாஜி வீட்டில் ரெய்டு.! இனிப்பு கொடுத்த கொண்டாடிய தமிழக அமைச்சர்கள்.? - ஜெயக்குமார்

இந்திய வரலாற்றிலேயே வருமானவரித்துறை 8 நாட்கள் சோதனை செய்த வரலாறே கிடையாது. செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடந்தது சக அமைச்சர்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

Jayakumar has insisted that the Tamil Nadu government should publish the true details of the passengers during the train accident in Odisha

டாஸ்மாக் கடைகளில் குடித்தவர்களே மரணம்

 காயிதே மில்லத்தின் 128 வது பிறந்தநாளையொட்டி, சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள அவரது துயிலிடத்தில், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், வளர்மதி ஆகியோர் மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை போதை மாநிலம் என்று சொல்லும் அளவிற்கு போதை வஸ்துகள் சர்வ சாதாரணமாக கொண்டு வரப்படுகிறது. அரசு டாஸ்மாக் கடைகளில் குடித்தவர்களே மரணமடைந்து வருகின்றனர். டாஸ்மாக் கடை மீது அச்சம் தரும் அளவிற்கு நிலைமை உள்ளதாக தெரிவித்தார். 

Jayakumar has insisted that the Tamil Nadu government should publish the true details of the passengers during the train accident in Odisha

கூலிங்கிளாஸ் போட்டுக் கொண்டு சூட்டிங் சென்றாரா.?

மதுபானங்களில் கலப்படம், கள்ளச்சாராய சாவு இதற்கெல்லாம் முழுக்க முழுக்க திமுகஅரசு பொறுப்பேற்க வேண்டும். இது போன்ற நிலை இந்தியாவில் வேறு எங்கும் கிடையாது. ஒடிசா ரயில் விபத்து ஒரு துயரமான சம்பவம் இந்த விபத்து தொடர்பாக விசாரணை செய்ய சிபிஐக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து அமைச்சர்கள் குழு சென்றது. ஆனால் சம்பவ இடத்திற்கே போகவில்லை. பிரதமர் வருகையை காரணம் காட்டி விடவில்லை என்பதெல்லாம் முதலமைச்சரின் மகன் ஒரு காரணமாக கூறலாமா? இதை ஏற்றுக்கொள்ள முடியாது. சுற்றுலா சென்று வந்தது போல சென்று வந்துள்ளனர். ஒரு துயர சம்பவத்திற்கு செல்லும்போது கூலிங்கிளாஸ் போட்டுக் கொண்டு ஷூட்டிங் போவது போல சுற்றுலா சென்று வந்துள்ளனர்.

Jayakumar has insisted that the Tamil Nadu government should publish the true details of the passengers during the train accident in Odisha

முழுமையான அறிக்கை தர வேண்டும்

ரயிலில் முன்பதிவு செய்தவர்கள் பட்டியல் தெரிந்து விட்டது. அதை வைத்து கணக்கு சொல்கிறீர்கள். 150 உடல்கள் அடையாளப்படுத்த முடியாமேல் உள்ளது. விசாரித்து ஒட்டுமொத்தமாக அறிக்கை தர வேண்டும். ஆனால் முந்திரிக்கொட்டை போல இன்னும் ஐந்து பேர் நிலை என்ன என்று தெரியவில்லை ஆனால் எந்த விதமான பிரச்சினையும் இல்லை என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அரசு சார்பில் முழுமையான அறிக்கை தர வேண்டும். எத்தனை பேர் பயணித்தனர்? எத்தனை பேர் முன்பதிவு இல்லாமல் பயணித்தனர்? எத்தனை பேர் மருத்துவமனையில் உள்ளனர்? எத்தனை பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் பெற்றனர்? அவர்களது நிலவரம் என்ன? என்பது குறித்து முழுமையான அறிக்கை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

Jayakumar has insisted that the Tamil Nadu government should publish the true details of the passengers during the train accident in Odisha

இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

ஆளுநரை பொறுத்தவரை வேந்தர் என்ற அடிப்படையில் துணை வேந்தர்களை கூட்டத்திற்கு அழைத்துள்ளார். அது தவறு ஒன்றும் இல்லை. ஆனால் உயர்கல்வித்துறை அமைச்சரின் கூற்றை நாம் பார்க்க வேண்டும். துணைவேந்தர்கள் எதிர்காலத்தையும் நினைத்துப் பார்க்க வேண்டும். உங்களுக்கு எல்லாம் பின்னாடி இருக்கு என ஒரு அமைச்சர் துணைவேந்தரை மிரட்டுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது  கண்டனத்திற்குரியது என தெரிவித்தார்.  இந்திய வரலாற்றிலேயே வருமானவரித்துறை 8 நாட்கள் சோதனை செய்த வரலாறே கிடையாது. திமுகவில் உள்ள சக அமைச்சர்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அவர்களுக்குள்ளேயே இனிப்பு வழங்கி கொண்டாடுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

12,000 காலிபணியிடம்.!தலைமை ஆசிரியரும் இல்லை, ஆசிரியர்களும் இல்லை! பள்ளியை திறந்து என்ன செய்ய.? சீறும் இபிஎஸ்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios