Jayakumar criticizing Stalin

ஜெயலலிதாவின் ஆட்சியை எந்த கொம்பனாலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்றும் யாருடன் சேர்ந்தாலும் ஆட்சியை ஆட்டவும் முடியாது அசைக்கவும் முடியாது என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், சென்னை, பட்டினப்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ஜனநாயக படுகொலை பற்றி திமுக பேசுவது வேடிக்கையானது என்று என்றார்.

ஜனநாயக படுகொலைக்கு சொந்தக்காரர்களே திமுகவினர்தான் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

தமிழக சட்டப்பேரவையில் எம்.ஜி.ஆர்.ஆரை அவமானப்படுத்தியதும் திமுகவினர்தான் என்றும், சட்டசபையில் எம்.ஜி.ஆர். ஆட்சியில் போட்டிக் கூட்டத்தை நடத்தியதும் திமுகவினர்தான் என்றும் சட்டப்பேரவையில் ஜெயலலிதாவை மானபங்கப்படுத்தியதும் திமுகதான் என்றும் அவர் கடுமையாக தாக்கிப் பேசினார்.

ஜெயலலிதாவின் ஆட்சியை எந்த கொம்பனாலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது. யாருடன் சேர்ந்தாலும் எந்தக் கொம்பனாலும் ஆட்சியை ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது என்றார்.

தினகரன், ஸ்டாலின் குறித்து செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்தபோது, இவரு சோடா குடித்தால் அவரு ஏப்பம் விடுகிறார் என்றும் ஜெயக்குமார் விமர்சனம் செய்தார். ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்று டிடிவி தினகரனும், மு.க.ஸ்டாலினும் கைகோர்த்து செயல்படுவதாகவும் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.

ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகி விடாது என்றும் கோயாபல்ஸ் பிரச்சாரம் என்றும் திங்களைப் பார்த்து டேஷ் டேஷ் டேஷ் குறைத்திற்று என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கடும் விமர்சனம் செய்தார்.