என்ன பொசுக்குனு ஓபிஎஸ்ஐ ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டாரு..!
அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வந்துள்ளது. அதிமுக சட்டதிட்ட விதிகளின்படி செல்லுகின்ற காரணத்தினால், சிறப்பான மகிழ்ச்சியான தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது.
பாஜக அமமுகவை அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வருவது ஒரு போதும் நடக்காது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து, சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்;- அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வந்துள்ளது. அதிமுக சட்டதிட்ட விதிகளின்படி செல்லுகின்ற காரணத்தினால், சிறப்பான மகிழ்ச்சியான தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது.
இதையும் படிங்க;- எம்ஜிஆர்,ஜெயலலிதாவின் இடத்தை பிடித்த இபிஎஸ்..! அதிமுகவில் இதுவரை இருந்த பொதுச்செயலாளர்கள் யார் யார் தெரியுமா.?
கடிக்கும் மிருகங்களுடன்கூட வாழ்ந்துவிடலாம். நேற்றைக்கு ஒன்று, இன்றைக்கு ஒன்று என தனது சொல்லை மாற்றிக் கொள்கிற அந்த நிறமாறிகளுடன் என்றைக்குமே வாழ முடியாது ஓபிஎஸ்ஐ கடுமையாக விமர்சித்தார். ஓபிஎஸ்சை பொறுத்தவரை அவர் தொண்டர்களாலும், பொதுமக்களாலும் துடைத்தெறியப்பட்ட சட்டி. அதனால் அவர் பற்றி இனி பேசுவது தேவையற்றது. அதிமுக என்கிற கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் ஓபிஎஸ், அவருக்கு ஒருபோதும் கட்சியில் இடமில்லை என்றார்.
இதையும் படிங்க;- ஏத்துக்கவே முடியாது.. முன்னுக்குப் பின் முரணான தீர்ப்பு.. ஓபிஎஸ் அப்பீல்.. உடனே களத்தில் இறங்கிய இபிஎஸ்..!
மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தொடர்ந்து அங்கம் வகிக்கிறது. பாஜக அமமுகவை அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வருவது ஒரு போதும் நடக்காது என திட்டவட்டமாக ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.