ஏத்துக்கவே முடியாது.. முன்னுக்குப் பின் முரணான தீர்ப்பு.. ஓபிஎஸ் அப்பீல்.. உடனே களத்தில் இறங்கிய இபிஎஸ்..!

தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், பொதுச் செயலாளர் தேர்தலுக்கு அனுமதி அளித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு முன்னுக்குப் பின் முரணாக உள்ளது.

OPS appeals against judgment of single judge... EPS Party Caveat Petition

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், கடந்த ஜூலை 11ம் தேதி நிறைவேற்றப்பட்ட பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓபிஎஸ்,  மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிராபகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையும் படிங்க;- இன்னும் ஓபிஎஸ் ஆட்டம் முடியவில்லை? தீர்ப்பில் சாதகம் என்ன? மனு நிராகரிக்கப்பட்டது ஏன்? இதோ முழு விவரம்.!

OPS appeals against judgment of single judge... EPS Party Caveat Petition

இந்நிலையில், தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், பொதுச் செயலாளர் தேர்தலுக்கு அனுமதி அளித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. அப்பட்டமாக கட்சி விதிகள் மீறப்பட்டுள்ளதை அவர் கவனத்தில் கொள்ளவில்லை. ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகிவிட்டதாக உயர் நீதிமன்றமோ, உச்ச நீதிமன்றமோ தெரிவிக்கவில்லை. கட்சியில் இருந்து எங்களை நீக்கப்பட்டதில் விதிகள் மீறப்பட்டுள்ளன என்பதை ஒப்புக்கொள்ளும் நீதிபதி, அதற்காக தடை விதிக்க முடியாது என மறுப்பது ஏற்புடையது அல்ல. தீர்ப்பு வந்த மறுநிமிடமே எடப்பாடி பழனிசாமி அவசர கதியில் பொதுச் செயலாளராக பதவியேற்றுள்ளார்.

இதையும் படிங்க;-  தலையில் தொப்பி, கூலிங் கிளாஸ்.. எம்ஜிஆர் ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி.. வைரல் போட்டோஸ்..!

OPS appeals against judgment of single judge... EPS Party Caveat Petition

எனவே, மேல் முறையீட்டு வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் வரை, பொதுச் செயலாளராக பதவி வகிக்க தடை விதிக்க வேண்டும். தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபீக் அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.

OPS appeals against judgment of single judge... EPS Party Caveat Petition

இதனிடையே, அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக ஓபிஎஸ் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், இபிஎஸ் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. உயர் நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில், தனது தரப்பு விளக்கத்தை கேட்காமல் எவ்வித இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என இபிஎஸ் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios