அண்ணா குறித்து தவறாக பேசுவதை அண்ணாமலை நிறுத்திக் கொள்ள வேண்டும்.! இல்லையென்றால்... எச்சரிக்கும் ஜெயக்குமார்

யானை பசிக்கு சோள பொரி கொடுக்கிறார்கள் என மகளிர் உரிமை தொகை குறித்து விமர்சித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக திமுக கூறுவது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் எனவும் தெரிவித்தார். 
 

Jayakumar condemned Annamalai for criticizing Arignar Anna KAK

மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரின் உருவ சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவ படத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே பி முனுசாமி, ஜெயக்குமார்,  எஸ் பி வேலுமணி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார்,  உலகம் உள்ள வரை நிலைத்து நிற்க கூடிய வகையில் பேச்சு ஆற்றல் எழுத்து ஆற்றல் கொண்டவர். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பதற்கு ஏற்ப உழைத்தவர். அண்ணா வழியில் கழகம் வெற்றி நடைபோடுகிறது என கூறனார். 

Jayakumar condemned Annamalai for criticizing Arignar Anna KAK

அமித்ஷாவுடன் சந்திப்பு ஏன்.?

இதனை தொடர்ந்து அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிச்சாமி  சந்தித்து பேசியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர்,  நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் கூட்டணி கட்சி சந்திப்பு காலம் காலமாக இருக்கும் நடைமுறை தான். எங்கள் கூட்டணியில் பாஜக உள்ளது, அதனால் கூட்டணி கட்சி தலைவரை பொதுச்செயலாளர் சந்தித்து பேசினார்.

தேர்தல் அறிவித்த பிறகு கூட்டணி குழு கூடி தொகுதி பங்கீடு குறித்து பேசுவார்கள் என கூறினார். பேரறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை பேசியதற்கு, அதிமுக தொண்டர்கள் கொதித்து எழும் நிலையில் உள்ளனர்.அண்ணாமலை அவர் கட்சிக்காக என்ன வேண்டுமானாலும் பேசட்டும், மறைந்த தலைவர்களை கொச்சைப் படுத்துவதை நிறுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார். 

Jayakumar condemned Annamalai for criticizing Arignar Anna KAK

அண்ணாமலைக்கு எச்சரிக்கை

முத்துராமலிங்க தேவர், அண்ணா நெருங்கிய நண்பர்கள். முத்துராமலிங்க தேவர் மீது அதிமுக நன் மதிப்பு கொண்டு உள்ளது. அண்ணா பற்றி பேசியதற்கு அதிமுக கண்டம் தெரிவிக்கிறோம், அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும், இல்லையென்றால் எதிர்வினையை சந்திக்க நேரிடும். மீண்டும் பேசினால் அதிமுக தக்க பதிலடி கொடுக்கும் என தெரிவித்தார். நடக்காத விசியத்தை சொல்லி அண்ணா பெயரை கலங்கப்படுத்தக் கூடாது. மகளிர் உரிமைத் தொகை வழங்கும் நிகழ்ச்சி குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர்,  100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக திமுக கூறுவது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என விமர்சனம் செய்தவர் மகளிருக்கு 1000 ரூபாய் உரிமை தொகை கொடுப்பது  யானை பசிக்கு சோள பொரி கொடுப்பது போன்றது என விமர்சனம் செய்தார்.

Jayakumar condemned Annamalai for criticizing Arignar Anna KAK

மக்களை ஏமாற்றும் திமுக

மின்சார கட்டணம், சொத்து வரி, பால் கட்டணம் எல்லாம் ஏற்றி விட்டு, தமிழக மக்களுக்கு யானை பசிக்கு சோள பொறியாக மகளிர் உரிமை தொகை திட்டம் உள்ளதாக விமர்சனம் செய்தார்.தேர்தல் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றாமல் முழு பூசணிக்காயை அல்ல ஒரு பாராங்கல்லையே சோற்றில் மறைக்கக் கூடிய வல்லமை படைத்த கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் என ஜெயக்குமார் குற்றம்சாட்டினார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios