jayakumar about tamil fishermen and sasikala parole
தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி தமிழக மீனவர்களையும் படகுகளையும் சிறைபிடிப்பதையும் பின்னர் விடுவிப்பதையும் இலங்கைக் கடற்படை வாடிக்கையாக கொண்டுள்ளது.
இதுதொடர்பாக இருநாட்டு உயர்மட்ட அதிகாரிகளிடையே பலமுறை பேச்சுவார்த்தை நடந்தும் இலங்கைக் கடற்படையின் கைது நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து டெல்லியில் இன்று இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை நடத்துவதாகவும் தமிழக அரசின் நிதியுதவியுடன் இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகள் மீட்கப்படும் எனவும் தெரிவித்தார்.
சசிகலா பரோலில் வெளிவந்தது குறித்து கருத்து தெரிவித்த அவர், சசிகலா பரோலில் வந்ததால் எந்தவித அரசியல் மாற்றமும் நிகழாது. சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் சொத்துக்களை பிரிப்பது குறித்து ஆலோசனை நடத்திவருவதாகவும் தெரிவித்தார்.
