Asianet News TamilAsianet News Tamil

எங்க அப்பா பெயரிலேயே 5 பேரை வேட்பாளராக நிறுத்துறாங்க.. இபிஎஸ் முகத்தில் கரியை மக்கள் பூசுவார்கள்.. ஜெயபிரதீப்

 மக்கள் மிகவும் தெளிவாக தர்மத்தின் பக்கமும் நியாயத்தின் பக்கமும் வாக்களிக்க கூடியவர்கள். தேர்தல் ரிசல்ட் வெளியாகும் போது  சூழ்ச்சிக்கார கும்பலின் முகத்தில் கரியை பூசுவார்கள் என ஜெயபிரதீப் எதரிவித்துள்ளார்

Jaya Pradeep is confident that OPS will win Ramanathapuram constituency KAK
Author
First Published Mar 27, 2024, 10:11 AM IST

பாஜக கூட்டணியில் ஓபிஎஸ்

அதிமுகவில் ஏற்பட்டுள்ள அதிகார மோதல் காரணமாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அதிமுகவை மீட்கும் வகையில் சட்டப்போராட்டத்தில் இறங்கியுள்ளார். தற்போது பாஜக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கும் ஓ.பன்னீர் செல்வம், தனது செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் சுயேட்சை சின்னத்தில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயரிலையே 5 வேட்பாளர்கள் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Jaya Pradeep is confident that OPS will win Ramanathapuram constituency KAK

ஓபிஎஸ்க்கு வரவேற்பு

இந்தநிலையில், இது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், முன்னாள் முதலமைச்ர் ஓ பன்னீர்செல்வம் வெற்றி வேட்பாளராக போட்டியிடுவதற்கு ராமநாதபுரம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.  அப்போது அவர் மதுரையில் இருந்து ராமநாதபுரம் வரும் வரை வழி நெடுகிலும் 2000 க்கு மேற்பட்ட வாகனங்களில் மக்கள் தன்னெழுச்சியாக வரவேற்றனர்.  தேர்தலில் வெற்றிக்கனியை சமர்ப்பிப்போம் என்பதை மக்களுடைய முகத்திலும் மிகவும் நன்றாக தெரிந்தது.  அதனை கேள்விப்பட்ட சூழ்ச்சிக்கார எடப்பாடி கும்பலின் ஒரு சிலர், ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் பெயரில் 5 நபர்களை தமிழ்நாடு முழுவதும் இருந்து வரவழைத்து களத்தில் இறங்கியுள்ளது. 

முகத்தில் கரியை பூசுவார்கள்

அந்த அப்பாவிகளை கொண்டு வேட்புமனு  தாக்கல் செய்து இருக்கிறார்கள். எங்களது ராமநாதபுரம் மக்கள் எந்த அளவுக்கு நீங்கள் நினைத்திருக்கிறீர்கள்.?  அவர்களை என்ன முட்டாளாக நினைக்கிறீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் எங்களது மக்கள் மிகவும் தெளிவாக தர்மத்தின் பக்கமும் நியாயத்தின் பக்கமும் வாக்களிக்க கூடியவர்கள்.  அவர்களுடைய வாக்கு வரும் 19ஆம் தேதி தேர்தல் நாள் அன்று எதிரொலிக்கும். அதனுடைய ரிசல்ட் இரு மாதங்களுக்கு பிறகு தெரிய வரும்போது  இந்த சூழ்ச்சிக்கார கும்பலின் முகத்தில் கரியை பூசுவார்கள் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன் என ஜெயபிரதீப் இந்த வீடியோவில் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்

ADMK vs BJP: பாஜகவிற்கு தமிழகத்தில் 4 எம்எல்ஏக்கள் அதிமுக போட்ட பிச்சை- மோடி அரசை இறங்கி அடித்த சி.வி சண்முகம்

Follow Us:
Download App:
  • android
  • ios