பாஜகவை தனிமை படுத்த வேண்டும்..! ராகுல் காந்தி பதவி பறிப்பு கோழைத்தனமான செயல்-ஜவாஹிருல்லா ஆவேசம்

ராகுல் காந்தி பதவிப்பறிப்பு பாஜகவினரின் கோழைத்தனமான செயல் என தெரிவித்துள்ள மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, பாஜக தலைவர்கள் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுவதாக கூறினார்.  
 

Jawahirullah has urged the opposition parties to come together to isolate the BJP

இஸ்லாமிய சிறை கைதிகள்

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சென்னை மண்டல ஆலோசனைக் கூட்டம் மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச் ஜவாஹிருல்லா தலைமையில்  நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் நீண்ட காலமாக சிறைவாசிகளாக உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்வதற்கு ஆதிநாதன் குழு பரிந்துரை ஏற்று ஆளுநர் ஒப்புதலுக்கு அளிக்க தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மத்திய பாஜக அரசு சமூகநீதியை குழிதோண்டி புதைக்கின்ற பணியில் ஈடுபட்டிருக்கிறது.  கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடைபெறக்கூடிய நிலையில் அந்த மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை  முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட நான்கு சதவீத கல்வி வேலை வாய்ப்பு இட ஒதுக்கீடு ரத்து செய்து சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்கள் இதை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார். 

மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால்..? அதுதான் நாட்டின் கடைசி ஜனநாயக தேர்தல் - கி.வீரமணி எச்சரிக்கை

Jawahirullah has urged the opposition parties to come together to isolate the BJP

விரக்தியில் பாஜக

முதல் கட்டமாக முற்படுத்த வகுப்பினருக்கு வேலைவாய்ப்பில் ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு என்ற ஒரு அறிவிப்பை செய்தது இதன் மூலமாக அரசாங்கத்தின் வேலை வாய்ப்புகள் மற்றும் கல்வி வாய்ப்புகளில் குறிப்பிட்ட முற்பட்ட வகுப்பினர் மற்றும் முக்கியமான இடங்களை பெறக்கூடிய நிலை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத ஒற்றுமை பயணம் நடத்தினார் இந்தப் பயணம் அனைத்து மாநிலங்களிலும் ஒரு எழுச்சி ஏற்படுத்தி பிரதமர் மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்களை தூங்கா இரவுகளை கொடுத்திருப்பதாக தெரிவித்தார்.  ராகுல் காந்தியினுடைய பதவி பறிப்பு என்பது பாஜக தலைவர்கள் விரக்தி உச்சத்தில் இருக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்திருப்பதாவ்வும் கூறினார். 

Jawahirullah has urged the opposition parties to come together to isolate the BJP

ஓரணியில் திரள வேண்டும்

சமூக நீதி மட்டுமல்லாமல் ஜனநாயகத்திற்கு விரோதமாகவும் பாஜக செயல்பட்டு வருகிறது இதன் எடுத்துக்காட்டாக தான் ராகுல் காந்தி எம்பி பதவி பறிக்கப்பட்டுள்ளது.  அவதூறு பேசினார் என்ற வழக்கில் நீதிமன்றம் தண்டனை விதிக்கப்பட்டு அதே நீதிமன்றத்தில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு அவருக்கு மேல் முறையீடு செய்வதற்கான ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராகுல் காந்தியிடமிருந்து பறித்தது பாஜகவினரின் கோழைத்தனமான செயலாக உள்ளதாக தெரிவித்தார்.  இது ஜனநாயகத்திற்கு நம்முடைய நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற மிகப்பெரிய சவாலாக இருக்கிறது இந்த சவாலை முறியடிக்க கூடிய வகையில் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஜனநாயகத்தில் நம்பிக்கை இருக்கின்ற அனைத்து கட்சிகளும் பாஜகவை தனிமை படுத்த வேண்டும் ஓரணியில் திரண்டு இதற்காக போராட வேண்டும் என வலியுறுத்தினார். 

இதையும் படியுங்கள்

மத்திய அமைச்சரை அன்புமணி சந்திக்காதது ஏன்.? தேல்தலுக்காக பீதியை கிளப்புறாங்க..? பாமகவை விளாசும் திமுக அமைச்சர்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios