நடிகை ஸ்ரீதேவிக்கு அஜித்தை எக்கச்சக்கமாக பிடிக்கும். அதற்கான காரணங்களில் முக்கியமானது, ஒருகாலத்தில் அஜித்துடன் ஏக நெருக்கமாக நடித்த நடிகை மகேஸ்வரிதான். 

அமிதாப் பச்சன் தயாரிப்பில் உருவான ‘உல்லாசம்’ படத்தில் அஜித்துடன் நடித்த மகேஸ்வரி அதன் பின்னும் தலயுடன் தொடர்ந்து நடித்தார். அஜித்தின் மேன்லினஸ் உள்ளிட்டவற்றை தன் சித்தியான ஸ்ரீதேவியிடம் மகேஸ்வரி சிலிர்த்துக் கொட்ட, அஜித்தின் ஃபேனாகாவே மாறிவிட்டார் மயில். அஜித்தின் எல்லா படங்களையும் மும்பையில் பார்த்துவிடும் ஸ்ரீதேவியின் குடும்பம். அஜித்துடன் ஒரு படமாவது நடிக்க வேண்டுமென்பது ஸ்ரீதேவியின் விருப்பம்.

  

நீண்ட இடைவெளிக்கு பின் ‘இங்லீஸ் விங்லீஸ்’ பண்ணும்போது மிகச்சரியாக அஜித்தை பயன்படுத்திக் கொண்டது ஸ்ரீதேவியின் குடும்பம். கெஸ்ட் ரோலில் அம்சமாக வந்து சென்றிருப்பார் தல. அந்தப் படம் தமிழில் செம்ம வரவேற்பை பெற அஜித்தின் அடையாளமும் ஒன்று. ஸ்ரீதேவியின் மரணத்துக்குப் பின், பெரும் வருத்தத்துகுப் பின் மெதுவாக மீண்டிருக்கிறது அவரது குடும்பம். அவரது மகள் ஜான்வி, ஹீரோயினாக அறிமுகமான ‘தடக்’ இந்திப்படம் பரவலான வரவேற்பைப் பெற்று, பாலிவுட்டில் ஜான்வீக்கு நல்ல விசிட்டிங் கார்டாய் அமைந்தது. இதை ரசிக்க ஸ்ரீதேவி உயிருடன் இல்லை. ஆனால் அவருக்கு தன் மகளை தமிழில் நடிக்க வைக்க எப்போதுமே ஆசை உண்டு. இது அவரது கணவர் போனி கபூருக்கு நன்றாகவே தெரியும்.

  

இந்நிலையில், விஸ்வாசம் மெகா ஹிட்டுக்கு பிறகு அஜித் நடிக்கும் ‘பிங்க்’ பட ரீமேக்கை போனிகபூர் தயாரிக்க விநோத் இயக்குகிறார். அமிதாப் கேரக்டரில் அஜித் நடிக்க, ஜோடியாக வித்யாபாலன். ஷூட் துவங்கிவிட்ட நிலையில், இப்போது ஜான்வியும் இப்போது இந்த படத்தில் இணைகிறார் என்று தகவல்கள் தடதடக்கின்ற. 

ஆபத்தில் இருக்கும் மூன்று இளம் பெண்களை சீனியர் வழக்கறிஞர் அஜித், காப்பாற்றுவதுதான் கதை. இந்தப் படத்தில் ஜான்விக்கு ஹீரோயின் போன்ற அந்தஸ்து எதுவும் கிடையாது. இதை அப்பாவிடம் போனியிடம் அவர் கேட்டபோது, ‘தமிழ் மட்டுமில்ல தென்னிந்திய சினிமா இண்டஸ்ட்ரியில நீ சாதிக்கணும்னா அஜித் கூட அறிமுகமாகுறது அமர்க்களமான ஓப்பனிங் தரும். அவர் படத்துல சின்னதா வேடம் கிடைச்சாலும் மிஸ் பண்ணாதே! அவருக்கு அப்படியொரு மாஸ் சவுத் இண்டியாவுல.’ என்று ஜான்விக்கு ஏக ஆச்சரியத்தை ஏற்படுத்திக் கொடுத்தாராம்.
 
தல படத்தில் ஜான்வி நடிப்பது உண்மையோ இல்லையோ இன்னும் அது உறுதியாகவில்லை. ஆனால், போனிகபூர் அஜித்தை புகழ்ந்த விஷயம் மட்டும் வைரலாகிறது கோலிவுட்டில்.