தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பதற்கு முதலில் என்ன செய்ய வேண்டும் எனறால் விலங்குகள் நல ஆணையத்தை கலைக்க வேண்டும் என்று மு.க ஸ்டாலின் ஆவேசமாக பேசினார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் , உடனடியாக விலங்குகள் நல வாரியத்தை  கலைக்க வேண்டும். இதை எங்களால் செய்ய முடியாது என மத்திய அரசு சொல்லலாம். திட்ட கமிஷனையே கலைத்தவர்கள் நீங்கள் உங்களால் இதை செய்ய முடியாதா? 

இன்றைய தினம் விலங்குகள் நல வாரியம் என்ன செய்கிறது தமிழக அரசை கலைக்க கடிதம் எழுதுகிறது. இதை நாங்கள் அரசியல் ரீதியாக கேட்கலாம். நாங்கள் எதிர்கட்சி எங்களுக்கு அந்த உரிமை உள்ளது.  தமிழக அரசை கலைக்க கோரும் கோரிக்கை வைக்க  விலங்குகள் நல வாரியத்துக்கு இந்த துணிச்சல் எங்கிருந்து வருகிறது. இதற்கு முதல்வர் என்ன நடவடிக்கை எடுத்தார்.

செயலற்ற ஒரு தன்மையுடன் தான் இன்றைய அரசு இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாமா? என்று ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.