மெரினாவில் அரசு திடீரென மின்சாரத்தை துண்டித்துள்ளனர். இதனால் போராடும் இளைஞர்கள் செல்போனில் டார்ச் போட்டு தங்கள் எதிர்ப்பை சிம்பாலிக்காக காட்டினர்.
வழக்கமாக எல்லா அரசுகளும் செய்யும் தவறை தமிழக அரசும் செய்து வருகிறது. போராட்டம் நடத்தும் இளைஞர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவராமல் குறுக்கு வழியை கையாண்டு மேலும் நெருப்பை விசிறி விடும் வேலையை செய்கின்றனர்.

அலங்காநல்லூரில் பற்றிய தீ பெருந்தியாய் தமிழகம் முழுதும் பரவுகிறது. தமிழகத்தின் முக்கிய நகரங்களில் கூடியுள்ள இளைஞர்கள் தங்கள் கோரிக்கையை வைத்து போராடி வருகின்றனர். அவர்கள் வைக்கும் கோரிக்கை என்ன , பீட்டாவை தடை செய்ய வேண்டும், ஜல்லிக்கட்டு நடக்க உறுதியளிக்க வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை வழக்கு எதுவும் இன்றி விடுதலை செய்ய வேண்டும்.
இது பற்றி போராட்ட களத்தில் உள்ள இளைஞர் ஒருவரை கேட்ட போது , சார் இவை எல்லாம் அரசால் முடியாத பெரிய விஷயங்களே அல்ல. பீட்டாவுக்கு எதிராக தடையை கொண்டுவர முயற்சி எடுக்கப்படும் என்ற வாக்குறுதியை அளிக்க தமிழக அரசுக்கு என்ன தயக்கம்.

போராடும் இளைஞர்களை யாராவது அமைச்சர் சந்தித்து ஜல்லிக்கட்டு தடை நீக்கத்தில் உறுதியாக இருக்கிறோம் அதில் உள்ள சட்ட சிக்கலை களைய போராடுவோம் வெல்வோம் , கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கிறோம் என்று சமாதானம் பேசி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரலாம்.
ஆனால் எல்லா விஷயங்களிலும் வாய்மூடி மவுனச்சாமியாராக இருப்பது போல் இந்த விஷயத்திலும் இருப்பேன் என்றால் போராட்டம் எப்படி முடிவுக்கு வரும் என்பது தான் பிரச்சனை. என்று அந்த இளைஞர் கேட்டார்.


கே.பி. முனுசாமி பேட்டி என்றவுடன் மூன்று அமைச்சர்கள் உடனடியாக கொதித்து போய் பிரஸ்ச பார்க்குறீங்க , மாணவர்கள் , இளைஞர்கள் போராட்டம் என்றால் உங்களுக்கு அவ்வளவு அலட்சியமா ? தமிழக ஜீவாதார பிரச்சனை உங்களுக்கு அவ்வளவு சாதாரணமாக போய்விட்டதா? நாளை அனைத்து கல்லூரிகள் , பள்ளிகளில் போராட்டம் பரவ போகுது அப்போது தெரியும் மாணவர் சக்தி என்று ஒரு இளைஞர் பயமுறுத்தினார்.

கடற்கரை முழுதும் டார்ச் அடித்து தங்கள் போராட்ட உணர்வை காண்பிக்கும் இளைஞர் கூட்டத்துடன் சமாதானம் பேசாவிட்டால் சூரியனுக்கே டார்ச் லைட் அடிக்கும் கூட்டம் எங்கள் கூட்டம் , எங்க கிட்டயேவா? என்று கொதித்து பேசினார் ஒரு இளைஞர் .

நியாயம் தான் என்று சொல்லிவிட்டு வந்தோம். மாணவர்கள் , இளைஞர்கள் போராட்டத்தை அரசு அலட்சியமாக கையாண்டால் அது வரும் நாட்களில் பெரிதாக வெடிக்கும் என்பதே உண்மை.
