ஜல்லிக்கட்டு தடை நீங்கி வாடிவாசல் திறக்கப்பட்டு காளைகள் துள்ளிவரும் நானே ஜல்லிக்கட்டை துவக்கி வைப்பேன் என்று முதல்வர் ஓபிஎஸ் மகிழ்ச்சியுடன் விமான நிலையத்தில் பேட்டி அளித்தார்.

ஜல்லிக்கட்டினை நடத்துவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்யும் கோரிக்கையினை பாரத பிரதமரை சந்தித்து வைக்கப்பட்டது. 

நானே ஒரு நாள் தங்கியிருந்து சட்ட வல்லுனர்களை கலந்து ஆலோசித்து ஜல்லிக்கட்டினை நடத்துவதற்கான சட்ட ஆலோசனை , அவசரச சட்டம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.

தமிழக அரசின் சட்ட வரைவு உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி விட்டோம் , விரைவில் உள்துறை , சுற்றுசூழல் , சட்ட அமைச்சகம் ஒப்புதல் பெற்று இன்று மாலை குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்ப பட உள்ளது.

தமிழக மக்கள் அல்லாமல் உலக மக்களின் விருப்பத்திற்கு ஏற்றப்படி ஜல்லிக்கட்டு நடத்த வழி வகை செய்யப்படும்.மாணவர்கள் இளைஞர்கள் விருப்பபடி ஓரிரு நாளில் வாடிவாசல் திறக்கப்பட்டு ஜல்லிக்கட்டு காளைகள் துள்ளிவரும் மகிழ்ச்சியான நிகழ்வு நடக்கும். 

அப்படி நடக்கும் போது நீங்களே துவக்கி வைப்பீர்களா? 

எல்லோருடைய எண்ணமும் அதுவானால் கட்டாயம் நான் கலந்து கொள்வேன். 

ஜல்லிக்கட்டு நடத்த விலக்கின அமைப்புகள் தடை வாங்கினால் என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்?

எத்தகைய தடை வந்தாலும் அதை சட்டரீதியாக சந்தித்து தமிழக அரசு முறியடிக்கும். என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.

டெய்ல் பீஸ்: ஓபிஎஸ் மேல் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டது. மத்திய அரசிற்கு எதிரான போராட்டத்தை மாநில அரசிற்கு எதிராக திசை திருப்பினர். ஆனால் அத்தனையையும் ஓபிஎஸ் முறியடித்துள்ளார். திமுகவின் போராட்டங்கள் இளைஞர்களால் ஒன்றுமில்லாமல் போனது.

ஓபிஎஸ் ஒப்புதலை வாங்கி சட்டரீதியாக நடவடிக்கை எடுத்ததை அவரது முகத்தில் பொங்கிய பூரிப்பில் காணமுடிந்தது. பேட்டி வேண்டாஅம் என்றி ஐஏஎஸ் அதிகாரி விமான நிலையத்தில் கூறியதை கண்டுகொள்ளாத ஓபிஎஸ் பேட்டி கொடுத்துவிட்டுத்தான் சென்றார்.