ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்காவிட்டாலும் எனது சொந்த ஊரான ஸ்ராவயலில் ஜன்.22 ல் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சைதாப்பேட்டையில் மனித சங்கிலி போராட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இது பற்றி பேட்டி அளித்த சரத்குமார் கூறியதாவது:

நாய்களை பூனைகளை கொன்று குவித்தது பீட்டா , ஸ்பெயின் மாட்ரிட் நகரில் காளைகளை கொல்லும் போராட்டம் நடத்தப்பட்டது குறித்து பீட்டா வழக்கு போட்டார்கள் இது எங்கள் பாரம்பரியம் வெளியே போ என்று பீட்டாவை வெளியே அனுப்பி விட்டார்கள் அவர்கள் .

பீட்டா இருப்பது அமெரிக்கா அங்கு காளை போராட்டத்தை இவர்களால் தடுக்க முடியவில்லை வேலையை பார் என்று சொல்லி விட்டார்கள் , ஆனால் பீட்டா சீஈஓ பூர்வா ஜோஷ்வார சொல்கிறார் தமிழர்களின் ஜல்லிக்கட்டு நிறுத்தப்படவேன்உம் என்று . சட்டப்பிரிவு 29.1 கீழ் சட்டம் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும். 

 முனிசிபாலிட்டி சட்டம் இயற்றினால் உச்சநீதிமன்றம் கூட தலையிட முடியாது என்கின்றனர். எனக்கு ஒரு பாரம்பரியம் உள்ளது, எனது பாரம்பரியம் ஜல்லிக்கட்டு பின்னனி கொண்டது. எனது தாத்தா முத்தையா மாடுபிடி வீரர். கல்யாணி என்ற காளையை வளர்த்துள்ளார். ஆகவே ஜல்லிக்கட்டு தடை இருந்தாலும் நீக்கினாலும் வரும் 22 ஆம் தேதி எனது சொந்த ஊரான ஸ்ராவயலில் ஜல்லிக்கட்டு நடக்கும் , நடந்தே தீரும்.

மாணவர்களே , இளைஞர்களே, பொது மக்களே வாழ்த்துக்கள் பாராட்டுகள். 

நடிகர் சங்க போராட்டத்தை எப்படி பார்க்கிறீர்கள்? 

இது ஒரு போராட்டம் அனைவரும் ஒன்றுபட்டு போராடுகிறார்கள் இதை நான் பாராட்டுகிறேன் . ஆகவே எல்லோரும் போராடுகிறார்கள் தமிழினம் காக்கப்படும் என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன்.

அடுத்த போராட்டம் கோகோ கோலா ஒழிக்கப்படவேண்டும். மோடி சொல்கிறார் வருங்காலம் இளைஞர் கையில் என்கிறார்.அந்த இளைஞர்கள் கேட்கிறார்கள் அனுமதி அளிக்க வேண்டியதுதானே. நீட் விவகாரத்தில் உடனடியாக முடிவெடுக்க முடிகிறது , பணமதிப்பிழப்பு விவகாரத்தில் அவசர சட்டம் கொண்டு வர முடிகிறது ஏன் மோடி இதற்கு மட்டும் முடிவெடுக்க மாட்டேங்கிறார் , தமிழனத்து எதிரான செயல்பாடு இது. 

அது நீதிமன்ற வழக்கில் உள்ளது என்கிறார்கள்?

 அப்படியானால் காவிரி பிரச்சனையும் நீதிமன்ற வழக்கு நிலுவையில் தானே இருக்கிறது. இவ்வாறு சரத்குமார் பேசினார்.