தமிழகத்தில் வரலாறு காணாத புரட்சி போராட்டம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், மனம் இறங்கி வரவில்லை பிரதமர் மோடி. ஜல்லிக்கட்டு குறித்த ஒரு தார்மீக ஆதரவையோ அல்லது போராட்டக்காரர்களுக்கு ஒரு ஆதரவு வார்த்தையோ, மத்திய அரசு இதுவரை தெரிவிக்கவில்லை.


தமிழக போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், விரைந்து சென்று பிரமரை சந்தித்தார். ஆனால், பிரதமரை சந்தித்தபின் மோடி அளித்த விள்க்கம். போராட்டக்காரர்களையும், தமிழர்களையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என கைவிரித்துவிட்டார் மோடி.

சம்பிரதாயத்துக்காக, தமிழகத்துக்கு எபோதும் உறுதுணையாக இருக்கும் என்ற வார்த்தையை மட்டும் தெரிவித்துவிட்டார். இதனால், போராட்டக்காரர்கள் ஏமாற்றம் அடைந்ததுடன், கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.