Asianet News TamilAsianet News Tamil

jai bhim; சிவக்குமார் குடும்பத்த சும்மா விடக்கூடாது...?? உசுப்பேற்றும் உமா ஆனந்த்.

ஜெய் பீம் பட விவகாரத்தில் சர்ச்சையை மேலும் மேலும்  அதிகரிக்க செய்கிறார். அந்தோணிசாமி என்ற பெயருக்கு எதற்காக குரு என்று பெயர் வைத்தார்கள், இது வன்னியர்கள் மீதான தாக்குதல் அல்ல ஒட்டுமொத்த இந்துக்களின் மீதான தாக்குதல், தொடர்ச்சியாக்க இப்படி நடந்து கொள்ளும் சூர்யா மீது நிச்சயமாக வழக்கு தொடுக்க வேண்டும், 

jai bhim; should action on Sivakumar family ... ?? Uma Anand angry.
Author
Chennai, First Published Nov 23, 2021, 10:37 AM IST

உண்மை கதை எனக்கூறி படமெடுக்கும் சூர்யா அந்த கதையை தனக்கு ஏற்ப வளைத்துக் கொள்வது எந்த விதத்தில் நியாயம் என்றும்? சூர்யா எடுக்கும் அடுத்த படமும் இதே போல சர்ச்சையை ஏற்படுத்தும் படமாகத்தான் இருக்கும் என்றும், இந்துக் கோயில் மீட்பு இயக்கத்தின் மாநில செயலாளரும், அரசியல் விமர்சகருமான உமா ஆனந்த் ஆதங்கம் தெரிவித்துள்ளார். ஜெய் பீம்  திரைப்படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தி விட்டதாக கூறி பாமக, வன்னியர் சங்கம் உள்ளிட்டவைகள் நடிகர் சூர்யாவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் நிலையில் உமா ஆனந்த் இவ்வாறு விமர்சித்துள்ளார். 

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் முக்கிய வேடத்தில் சூர்யா நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம்,  இந்தத் திரைப்படம் ஓடிடி இணையதளத்தில் வெளியாகி மொழி, இனம் கடந்து சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. ஹாலிவுட் திரைப்படங்களையே பின்னுக்கு தள்ளும் அளவுக்கு பார்வையாளர்களை கொண்ட படமாக வெற்றிபெற்றுள்ளது. இப்படத்தில் பழங்குடியின இருளர்  ராஜாக்கண்ணு என்பவர் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை  மையமாக வைத்துப் புனைவுகளுடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வரும் உதவி ஆய்வாளருக்கு குருமூர்த்தி என பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல் அவரது இல்லத்தில் வன்னியர்களின்  அடையாளங்களில் ஒன்றான அக்னி கலசம் காலண்டர் மாட்டப்பட்டுள்ளது. இந்த காட்சி மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ குரு அவர்களையும், வன்னிய சமூகத்தையும் இழிவுபடுத்தும் நோக்கில் உள்ளதாக கூறி, பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து  உடனே அந்த காலண்டர் காட்சி மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அந்த காட்சி  வன்னிய சமூகத்தின் மீதுள்ள வன்மத்தின்காரணமாக வைக்கப்பட்டது என்றும், இதற்கு சூர்யா உடனே பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தொடர்ந்து பாமக குரல் எழுப்பி வருகிறது. இதனால் சூர்யாவுக்கும் -பாமகவுக்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பலரும் சூர்யாவுக்கும்- பாமகவுக்கும் ஆதரவாக மாறிமாறி குரல்கள் கொடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் சூர்யாவை கடுமையாக விமர்சித்து  இந்துக் கோயில் மீட்பு இயக்கத்தின் மாநில செயலாளரும், அரசியல் விமர்சகருமான உமா ஆனந்த் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில், 

ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறி வைத்து படம் எடுப்பது, அதனால் சர்ச்சையை ஏற்படுத்துவது வாடிக்கையாகியுள்ளது. இதற்கு முன்பு நடிகர் சூர்யா சூரரைப்போற்று என்ற திரைப்படத்தை எடுத்தார். அதில் கோபிநாத்தின் வாழ்க்கையை படமாக எடுத்திருப்பதாக கூறினார். உண்மையிலேயே கோபிநாத் அவர்கள் ஒரு பிராமண சமூகத்தை சேர்ந்தவர், ஆனால் அவரை ஒரு மாற்று சமூகத்தினராக காண்பித்தார். இப்போது ஜெய் பீம் என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார். அதில் உண்மை கதையை மையப்படுத்தி எடுத்திருப்பதாக கூறுகிறார். ஆனால் அவர்களுக்கு வேண்டும் என்பதை மட்டும் வைத்துக்கொண்டு தங்களுக்கு ஏற்ப அந்த  கதையை தனக்கு சாதகமாக வளைத்துக் கொள்வது சூர்யாவுக்கு வாடிக்கையாக உள்ளது. இது போன்ற கதைகளின் மூலம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தையோ, சாதியையோ குறிவைத்து தாக்கி அதன்மூலம் சமூகத்தில் அமைதியின்மையை, சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் நடவடிக்கையில் அவரது குடும்பம் ஈடுபட்டுள்ளது. அப்படியென்றால் சூர்யாவின் திட்டம் என்ன? சமூகத்தில் அமைதியை சீர்குலைப்பதுதானே?

ஜெய் பீம் பட விவகாரத்தில் சர்ச்சையை மேலும் மேலும்  அதிகரிக்க செய்கிறார். அந்தோணிசாமி என்ற பெயருக்கு எதற்காக குரு என்று பெயர் வைத்தார்கள், இது வன்னியர்கள் மீதான தாக்குதல் அல்ல ஒட்டுமொத்த இந்துக்களின் மீதான தாக்குதல், தொடர்ச்சியாக்க இப்படி நடந்து கொள்ளும் சூர்யா மீது நிச்சயமாக வழக்கு தொடுக்க வேண்டும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சூர்யா மற்றும் அவரது மனைவி தேர்ந்தெடுத்துள்ள பாதை தவறானது. அவரது மனைவி ஜோதிகா கோவில் கட்டுவதைவிட  நர்சிங் ஹோம் கட்டுங்கள் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இப்படி அந்த குடும்பம் தொடர்ந்து மைக் பிடித்து பேசி வருகிறது, இப்படி பேசுகின்ற அந்த குடும்பம் ஏன் மெரினாவில் நினைவிடம் கட்டுவது கூடாது அல்லது சிலைகள் வைக்கப்படுவது எதிர்த்துப் பேசவில்லை. நான் அடித்து சொல்கிறேன் சூர்யா எடுக்கும் அடுத்த படத்திலும் இதே போல வேறு ஒரு சமூகத்தை அவர் சீண்டுவார். இது போன்ற படங்களின் மூலம் வன்னியர்கள், பிராமணர்கள் ஆபத்தானவர்கள் என சொல்ல வருகிறாரா? அப்படி என்றால் வெளிப்படையாக சொல்ல வேண்டியதுதானே. மொத்தத்தில் இதற்கு முற்றுப் புள்ளி வைத்தாக வேண்டும். எனவே இந்த விவகாரத்தில் சூர்யாவை சும்மா விடக்கூடாது என அவர் எச்சரித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios