Asianet News TamilAsianet News Tamil

Jai bhim: வைர நெக்லஸ்காக சமுதாயத்தை அடகு வைத்தவர் ராமதாஸ்.. அடங்க மறுக்கும் வன்னியர் கூட்டமைப்பு ராமமூர்த்தி.

ஏற்கனவே பாமக ராமதாஸ் ரஜினிகாந்த்தை என்ன செய்தார்.? பாபா  திரைப்படத்தில் பிரச்சனை செய்து ரஜினியை கருப்பு பன்றி என்று கேவலமாக பேசி வம்புக்கு இழுத்தார், பிறகு அன்புமணியின் மகள் திருமணத்திற்கு ரஜினி வீட்டுக்கே சென்று பத்திரிக்கை வைத்தார் அன்புமணி. அவரும் திருமணத்திற்கு வந்தார், அன்புமணி செய்தது மானங்கெட்ட தனம்,

Jai bhim: Ramadass is the one who mortgaged the society for the diamond necklace .. Ramamurthy is the Vanniyar Federation who criticized pmk.
Author
Chennai, First Published Nov 25, 2021, 2:41 PM IST

பலரையும் மிக கேவலமாக பேசி விட்டு மீண்டும் அவர்களுடன் கூட்டு வைத்துக் கொண்டவர்தான் ராமதாஸ் என்றும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை மிக கடுமையாக விமர்சித்துவர் என்றும், பின்னர் அன்புமணி திருமணத்திற்கு அவர் கொடுத்த வைர நெக்லஸ் பரிசாக பெற்றுக்கொண்டு இந்த சமுதாயத்தையே அடகு வைத்தவர் ராமதாஸ் என வன்னியர் கூட்டமைப்பு தலைவர் சி.என் ராமமூர்த்தி கடுமையாக விமர்சித்துள்ளார். ஜெய் பீம் விவகாரத்தில் வன்னிய இளைஞர்களை  பாமகவும் அதன் தலைவர்களும் வன்முறைக்கு தூண்டுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் முக்கிய வேடத்தில் சூர்யா நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம்,  இந்தத் திரைப்படம் ஓடிடி இணையதளத்தில் வெளியாகி மொழி, இனம் கடந்து சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. ஹாலிவுட் திரைப்படங்களையே பின்னுக்கு தள்ளும் அளவுக்கு பார்வையாளர்களை கொண்ட படமாக வெற்றிபெற்றுள்ளது. இப்படத்தில் பழங்குடியின இருளர்  ராஜாக்கண்ணு என்பவர் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை  மையமாக வைத்துப் புனைவுகளுடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வரும் உதவி ஆய்வாளருக்கு குருமூர்த்தி என பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல் அவரது இல்லத்தில் வன்னியர்களின்  அடையாளங்களில் ஒன்றான அக்னி கலசம் காலண்டர் மாட்டப்பட்டுள்ளது. இந்த காட்சி மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ குரு அவர்களையும், வன்னிய சமூகத்தையும் இழிவுபடுத்தும் நோக்கில் உள்ளதாக கூறி, பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Jai bhim: Ramadass is the one who mortgaged the society for the diamond necklace .. Ramamurthy is the Vanniyar Federation who criticized pmk.

அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து  உடனே அந்த காலண்டர் காட்சி மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அந்த காட்சி  வன்னிய சமூகத்தின் மீதுள்ள வன்மத்தின்காரணமாக வைக்கப்பட்டது என்றும், இதற்கு சூர்யா உடனே பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தொடர்ந்து பாமக குரல் எழுப்பி வருகிறது. இதனால் சூர்யாவுக்கும் -பாமகவுக்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பலரும் சூர்யாவுக்கும்- பாமகவுக்கும் ஆதரவாக மாறிமாறி குரல்கள் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், பாமகவை கடுமையாக எதிர்த்தும் விமர்சித்தும் வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என் ராம மூர்த்தி தொடர்ந்து பேசி வருகிறார். அந்த வகையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள அவர், 

ஏற்கனவே பாமக ராமதாஸ் ரஜினிகாந்த்தை என்ன செய்தார்.? பாபா  திரைப்படத்தில் பிரச்சனை செய்து ரஜினியை கருப்பு பன்றி என்று கேவலமாக பேசி வம்புக்கு இழுத்தார், பிறகு அன்புமணியின் மகள் திருமணத்திற்கு ரஜினி வீட்டுக்கே சென்று பத்திரிக்கை வைத்தார் அன்புமணி. அவரும் திருமணத்திற்கு வந்தார், அன்புமணி செய்தது மானங்கெட்ட தனம், அதேபோல நடிகர் விஜயகாந்த்தை குடிகாரன் என மோசமாக விமர்சித்தனர், பிறகு அன்புமணி தேர்தலில் நிற்கும் போது பிரேமலதா விஜயகாந்த் அன்புமணிக்காக வாக்கு சேகரித்தார்.

Jai bhim: Ramadass is the one who mortgaged the society for the diamond necklace .. Ramamurthy is the Vanniyar Federation who criticized pmk.

இவர்கள் தொடர்ந்து சினிமா நடிகர்களை பிரச்சினை செய்வது பிறகு அவர்களுடன் சேர்ந்து கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். தர்மதுரை திரைப்படம் வந்தபோது அப்போது அன்புமணி என்ன கூறினார்? கலையை கலையாக பாருங்கள், சினிமாவை சினிமாவாக பார்த்து அதோடு விட்டு விடுங்கள் என கூறினார். ஆனால் இப்போது ஜெய்பீம் படத்திற்கு மட்டும் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார். பாமக தொடர் தோல்வியை சந்தித்து வருவதின் வெளிப்பாடுதான் இது.

உதாரணத்துக்கு 2011-ல் பாண்டிச்சேரியில்  திமுகவும் பாமகவும் கூட்டணி வைத்து மொத்தம் 30 இடங்களில் 15- 15 இடங்களில் போட்டனர் அதில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற்றவில்லை. அதேபோல  2016 இல் மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என ஒபாமாவின் ஸ்லோகன்கள  காப்பியடித்து இங்கு பிரச்சாரம் மேற்கொண்டனர் அதிலும் தோல்வியே மிஞ்சியது. அதைத்தொடர்ந்து 2021 ல் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி இல்லை. அதேபோல பாண்டிச்சேரியில் தேர்தலில் போட்டியிடவே இல்லை, வளர்ந்து வருகின்ற ஒரு கட்சி, தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்று சொல்லுகிற ஒரு கட்சி, தேர்தலில் போட்டியிடவே இல்லை. இதுமட்டுமல்ல ராதமாஸ் தன்னுடைய சுயநலத்திற்காக பலரையும் பல வகையில் மிரட்டினார். பலருக்கு எப்படியெல்லாம் தொல்லை கொடுத்தார். பலரை நீ நட முடியாது, நீ வெளியில் வர முடியாது என்றெல்லாம் பேசினார். கலைஞரை தரம் தாழ்ந்து விமர்சித்தார். ஜெயலலிதாவை மிக மோசமாக பேசினார்.

Jai bhim: Ramadass is the one who mortgaged the society for the diamond necklace .. Ramamurthy is the Vanniyar Federation who criticized pmk.

திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தாயோடும் சேய் உறவு வைத்துக் கொள்வதற்கு சமம் என மிக மோசமாக பேசினார். பிறகு அன்புமணிக்கு திருமணம் நடந்தது அப்போது வருகை தந்த ஜெயலலிதாவை வரவேற்க அவரே மைக்கை வாங்கி புரட்சித்தலைவியே வருக வருக என முழங்கினார். ஜெயலலிதா தாலி எடுத்துக் கொடுத்துதான் அன்பு நீ திருமணம் செய்து கொண்டார். அப்போது அவர் வைர நெக்லஸ் பரிசாக கொடுத்தார். வைரஸ் நெக்லஸ்க்காக இந்த சமுதாயத்தையே விற்றவர் ராமதாஸ். கொரோனா நேரத்தில்  மருந்து தயாரிப்பதற்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டது. அதற்குக் காரணமானவர் அன்புமணிதான். பொதுத்துறை நிறுவனங்களை மூடியது இவர்தான். கிங்ஸ் இன்ஸ்டியூட், குன்னூரில் பாஸ்டன் இன்ஸ்டியூட், இமாச்சல பிரதேசத்தில் உள்ள மற்றொரு நிறுவனத்தையும் மூடியது அன்புமணி தான் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ராம மூர்த்தி கூறினார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios