jagan mohan reddy assets are sezied

ஜெகன் மோகன் ரெட்டியின் ரூ. 148 கோடி சொத்துக்கள் முடக்கம்
அமலாக்கத்துறை நடவடிக்கை....


ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மீதான சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கை விசாரித்த அமலாக்கத்துறை 148 கோடி ரூபாய் மதிப்புள்ள அவரது சொத்துக்களை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த 2004 –ம் ஆண்டில் இருந்து ஜெகன் மோகன் ரெட்டி பல்வேறு கம்பனிகளை தொடங்கினார். அப்போது அவரது தந்தை ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டி ஆந்திர முதலமைச்சராக இருந்தார்.

இந்நிலையில் மாநில அரசின் முடிவுகள் மற்றும் திட்டங்கள் மூலம் சலுகை அடைந்தவர்கள் ஜெகன் மோகன் ரெட்டியின் கம்பனிகளில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் முதலீடு செய்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இது குறித்து சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. சி.பி.ஐ.யின் அறிக்கையின் அடிப்படையில் இந்த சட்டவிரோ பணப் பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வந்தது.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய அமலாக்கத்துறை ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் அவருடன் தொடர்புடையவர்களுக்கு சொந்தமான 148.89 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன் மூலம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பெரும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.