சசிகலா செய்த தவறுகளுக்குதான் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.
சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் செய்த அட்டூழியங்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயங்களே. அதற்கான சரியான தண்டனையைத்தான் சசிகலாவுக்கு நீதிபதிகள் கொடுத்திருக்கிறார்கள்.
இந்த தீர்ப்பின்மூலம் சசிகலா குடும்பத்தினரின் ஆட்டம் அடக்கப்பட்டுள்ளது. சரியாக சசிகலா எங்கு போக வேண்டுமோ அங்குதான் போக உள்ளார் எனவும், தேவைபட்டால் ஒ.பி.எஸ்ஸை சந்திப்பேன் எனவும் தீபா தெரிவித்தார்.
அரசியல் பிரவேசம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு வழக்கம்போல் வரும் 24 ஆம் தேதி அறிவிக்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
"போக வேண்டிய இடத்துக்குதான் போகிறார் சசிகலா" - ஜெ.தீபா "மகிழ்ச்சி"
Latest Videos
