J. Death! The inquiry headed by retired judge is not acceptable
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகம் தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது ஏற்கக்கூடியது அல்ல என்று தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்
ஜெயலலிதா, சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
ஜெயலலிதாவுக்கு, சென்னை, டெல்லி மற்றும் இங்கிலாந்து டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது, மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர்கள் உள்ளிட்டோர், ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாகவும், விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவார் என்றும் செய்திகள் வெளியாகின.
மருத்துவமனையில் இருந்து ஜெயலலிதா விரைவில் திரும்புவார் என்று தொண்டர்களும் பொதுமக்களும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஜெயலலிதாவின் மரண செய்திதான் வந்தது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 17 ஆம் தேதி அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், மதுரையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்றும், அவர் இட்லி சாப்பிட்டதாக கூறியது பொய் என்றும் கூறினார்.
ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருந்தால் நீதி விசாரணை நடத்தட்டும் என்றும் டிடிவி தினகரன் உள்பட பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர். அது மட்டுமல்லாது பதவியில் உள்ள நீதிபதியினைக் கொண்டே விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கட்சி தலைவர்களின் கோரிக்கையாக இருந்தது.
இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகம் தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்கு டிடிவி தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல், ஜெயலலிதா மரணம் குறித்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகம் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது ஏற்கக்கூடியதல்ல என்று கூறியுள்ளார்.
ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகம் தலைமையில் விசாரணைக் கமிஷன் ஏன் நியமித்தனர் என்று தெரியவில்லை என்றும் வெற்றிவேல் கூறியுள்ளார்.
