Asianet News Tamil

இது ரயில் இல்ல, சொர்க்கம். உள்ளே இருந்தபடி நீர் வீழ்ச்சி, நதி, மலை, ஆறு, எல்லாம் ரசிக்கலாம். இப்போ மும்பையில்

ரயில் பயணிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த பயண அனுபவத்தை கொடுக்கும் வகையில் மும்பை-புனே இடையே விஸ்டாடோம் என்ற ஐரோப்பிய பாணியிலான பெரிய கண்ணாடி ஜன்னல்கள் மற்றும்  கண்ணாடிகளால் வேயப்பட்ட குறைகளால் ஆன புதிய டெக்கான் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

Its not the train,  its heaven..  You can enjoy the water fall,  mountain, river, everything as it is inside. Now in Mumbai .
Author
Chennai, First Published Jun 26, 2021, 3:21 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

ரயில் பயணிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த பயண அனுபவத்தை கொடுக்கும் வகையில் மும்பை-புனே இடையே விஸ்டாடோம் என்ற ஐரோப்பிய பாணியிலான பெரிய கண்ணாடி ஜன்னல்கள் மற்றும்  கண்ணாடிகளால் வேயப்பட்ட குறைகளால் ஆன புதிய டெக்கான் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது.

குறிப்பாக ரயில் பயணம் என்பது சிலருக்கு சுவாரஸ்யமானதாகவும், சிலருக்கு மன சோர்வை கொடுக்க கூடியதாகவும் இருந்து வருகிறது. ரயில் என்பது வெறும் பயணத்திற்கான சாதனமாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், முதல்முறையாக பொழுதுபோக்கு அம்சம் நிறைந்ததாகவும், ஒரு கண்ணாடி அறைக்குள் அமர்ந்து சுற்றிலும் உள்ள இயற்கை சூழலை ரசிக்கும் வண்ணம், குட்டி சொர்கபுரியாகவும் ரயிலை மத்திய ரயில்வே துறை வடிவமைத்திருக்கிறது.மேற்கத்திய பாணியிலான விஸ்டாடோம் டெக்கான் எக்ஸ்பிரஸ் சேவையை மத்திய ரயில்வே அமைச்சகம் மும்பை முதல் புனே வரை அறிமுகம் செய்துள்ளது. இந்த ரயிலில் பயணிப்பது முழுக்க முழுக்க சுவாரஸ்யமானதாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இந்த ரயிலில் பயணிக்கும் நான்கு மணி நேர பயணத்தின் போது மும்பையை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் அழகை தெளிவாக பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் அது அமைந்துள்ளது.

அதாவது விஸ்டாடோம் பாணியிலான பெரிய கண்ணாடி ஜன்னல்கள், கண்ணாடியால் வேயப்பட்ட கூரைகள் மற்றும் சொகுசு ஓய்வு அறைகள் பயணிகள் வெளிப்புற அழகை அனுபவிக்க வகையில் ரயில் அமைந்துள்ளது. ரயிலுக்குள் இருந்தவாறு அனைத்து பக்கங்களிலும் சுற்றுச் சுழன்று இயற்கையை ரசிக்கும் வகையில் 180 டிகிரி வரை சுழலக்கூடிய இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மும்பை-புனே வழித்தடத்தில் பயணிகள் இப்போது இயற்கையுடன் இருப்பது போன்ற அழகிய அனுபவத்தையும் பெற முடியும், இது மாத்தரன் ஹில் (நெரலுக்கு அருகில்), சோங்கிர் ஹில் (பாலஸ்தாரிக்கு அருகில்), உல்ஹாஸ் நதி (ஜம்ப்ரூங்கிற்கு அருகில்), உல்ஹாஸ் பள்ளத்தாக்கு, கண்டாலா, லோனாவாலா போன்ற பகுதிகள் மற்றும் தென்கிழக்கு காட் பிரிவில் உள்ள நீர்வீழ்ச்சிகள், சுரங்கங்கள். போன்றொற்றை அருகில் கண்டு ரசிக்க முடியும். 

விஸ்டாடோம் ரயில் குளிரூட்டப்பட்ட அறைகளை கொண்டதாகும், கண்ணாடி கூரை, ஜி.பி.எஸ் அடிப்படையிலான தகவல் அமைப்பு மற்றும் எல்.ஈ.டி விளக்குகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஏர் கண்டிஷனிங் வசதி கொண்ட இந்த ரயிலில் ஒரே நேரத்தில்  44 பயணிகளை தங்க வைக்கும் திறன் கொண்டதாகும், தானியங்கி நெகிழ் கதவுகள், பனோரமிக் காட்சியை வழங்க சிறப்பு கண்காணிப்பு லவுஞ்ச் மற்றும் பல அடுக்கு லக்கேஜ் ரேக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ரயில் கூரையில் கண்ணாடி பேனல்கள் மற்றும் பக்கங்களில் பெரிய ஜன்னல்கள் உள்ளன. இவற்றிற்கான கட்டணம் சதாப்தி வகுப்பு ரயிலில் உள்ள அமர்ந்து செல்லும் வகுப்பு கட்டணத்திற்கு ஒத்ததாக இருக்கும், மேலும் எந்தவொரு வகை பயணிகளுக்கும் சலுகை கட்டண வசதி வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அனைத்து பிஆர்எஸ் மையங்களிலும், இந்திய ரயில்வே வலைத்தளமான www.irctc.co.in இல் இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயிலில் ஏற டிக்கெட் உறுதிப்படுத்தப்பட்ட பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் பயணிக்க கோவிட் -19 தொடர்பான அனைத்து விதிமுறைகளையும், எஸ்ஓபிகளையும் கடைபிடிக்குமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஜூன் 26 முதல் 01007 டெக்கான் எக்ஸ்பிரஸ் ஸ்பெஷல், சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸில் இருந்து தினமும் 07.00 மணிக்கு புறப்பட்டு அதே நாளில் 11.05 மணிக்கு புனேவந்தடையும். அதேபோல் 

01008 டெக்கான் எக்ஸ்பிரஸ் ஸ்பெஷல் ஜூன் 26 முதல் தினமும் 15.15 மணிக்கு புனேவில் இருந்து புறப்பட்டு சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸுக்கு 19.05 மணிக்கு வந்து சேரும். இந்த ரயிலின் சிறப்பு அம்சத்தை காட்டும் வகையில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியுஷ்கோயல் அதற்கான வீடியோ மற்றும் புகைப்படங்கை  தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ரயில் பயணிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த பயண அனுபவத்தை கொடுக்கும் வகையில் மும்பை-புனே டெக்கான் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயிலில் இயக்கப்பட்டுள்ளது. முழுமையாக முன்பதிவு செய்யப்பட்ட விஸ்டாடோம் ரயில் முதல் பயணத்தின் ஒரு பார்வை. இதோ என ஒரு மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகிய பயணிகள் ரசிக்கும் வகையில் ஒரு வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார். 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios