இந்தி மொழி படிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் திமுகவினர் தங்கள் பிள்ளைகளை இந்தி மொழிபடிக்க வைக்கின்றனர். அது போல் டெல்லி அரசியலுக்கு செல்லவும் இந்தி மொழி தெரிந்தவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கின்றனர் என குஷ்பு திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் ஆண்டு தோறும் நடைபெறும் பொங்கல் விழா மற்றும் கலாச்சார ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்சி அருமனை புண்ணியத்தில் இருந்து ஊர்வலமாக துவங்கியது. 48 குழு 500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்ட தப்பாட்டம், கரகாட்டம் , சிலம்பாட்டம், சிங்காரி மேளம் என தமிழக கேரள கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த ஊர்வலத்தில் முருகன் வேல் ஏந்தி வருவதை போன்று நூற்றிக்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்கள்  வேடம் அணிந்து பங்கேற்றனர்.  புரணா கால பக்தி கதைகளை விளக்கும் வகையில் சாமி அவதாரங்களை குறிக்கும் பொம்மைகள் ஊர்வலத்தில் வந்தன. இந்த நிகழ்ச்சியில் தமிழகம் கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில் முடிவில் அருமனை சந்திப்பில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த கலாச்சார ஊர்வலத்தை பார்த்த வண்ணம் இந்த மேடையில் இருந்தவாறு  கலாச்சார ஊர்வல நிகழ்வுகளை  பாஜக செய்தி தொடர்பாளர் குஷ்பு  மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கண்டு களித்தனர். தொடர்ந்து மேடையில் பேசிய குஷ்பு கூறியதாவது: இந்தி மொழி படிக்க எதிர்ப்பு தெரிவித்து விட்டு திமுகவினர் தங்கள் பிள்ளைகளை ஹிந்தி மொழிபடிக்க வைக்கின்றனர். அது போல் டெல்லி அரசியலுக்கு செல்லவும் ஹிந்தி மொழி தெரிந்தவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கின்றனர். மகளிருக்கு திமுகவில் பாதுகாப்பு இல்லை, எனது வீட்டில் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் போது கல்வீசி தாக்குதல் நடந்தது. அப்போது நான் ஸ்டாலினிடம் பாதுகாப்பு கேட்டு சென்ற நேரத்தில், அவர் சாப்பிட்டு கொண்டு இருப்பதாக அவரது உதவியாளர்கள் கூறினார். 

நான் அங்கு ஸ்டாலினுக்காக காத்திருந்த நேரத்தில் தான் தாக்குதல் நடத்தியதே ஸ்டாலின்தான் என்று தெரியவந்து. அதனால்தான் நான் திமுகவைவிட்டு வெளியேறினேன். இவ்வாறு அவர் பேசினார். மேலும் மத்திய அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசிய அவர், விஷ்ணு , சரஸ்வதி போன்ற சாமிகள் அமர்ந்திருப்பதும்  என் பெயரில் இருக்கும் பூவுமான தாமரை பூவிற்கு வாக்களிக்க மறவாதீர்கள் என்று அனைவரையும் பார்த்து கேட்டு கொண்டார். 

தொடர்பு பேசிய மாநில தலைவர் முருகன் பாரதியார் , திருவள்ளுவர் போன்றோரின் திலகம் உட்பட தமிழ்நாடு கலாச்சார  அடையாளங்களை அழித்து விட்டு அவர்களது உருவப்படத்தை வெளியிட்டு தமிழையும், தமிழ் கலாச்சாரத்தையும் திமுக அழித்து கொண்டு இருக்கிறது என்று பேசினார்.